பாஜக கூட்டணியில் தான் விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது, அதனால்தான் அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் 40 சதவீத அளவிற்கு வாக்குகளையும் பெற்றது. இப்போது அதிமுக 75 தொகுதிகளில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது என்றால் அதற்கு பாஜக ஒரு காரணம் என அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
அதிமுக-பாஜக பிரிவு திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும் என பாஜக பொதுச் செயலாளர் நாகராஜன் கூறியுள்ளார். திமுக ஆயிரம் என் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் பாஜக வெளியேறியதால்தான் அதிமுக தோற்றுவிட்டது என்ற பேச்சுக்கள் தேர்தலுக்குப்பின் வரப்போகிறது என்றும் அவர் கூறியுள்ளார். எதிர் வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டசிணியில் இருந்து பாஜக வெளியேறி உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜெயலிதா மறைவுக்குப் பின்னர் திமுகவுக்கு எதிராக அதிமுக- பாஜக கூட்டணி வலுவாக களமாடி வந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாஜக அறிவித்து தேர்தலை தனித்து எதிர்கொள்ள தயாராகி வருகிறது. கூட்டணி வெளியேற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக எம்எல்ஏக்கள் ஆண்மை இல்லாதவர்கள் என பேசிய பேச்சுதான் முதன்மையான காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இரு கட்சிக்கும் இடையே இழுபறி ஏற்பட்டது. கூட்டணியில் இருந்து கொண்டே தொடர்ந்து பாஜக தலைவர்கள் அதிமுகவினரை சீண்டும் வகையில் பேசி வந்நதால் நீண்டகாலமாகவே அதிமுக தலைவர்கள் மத்தியில் பாஜக மீது மனக்கசப்பு இருந்து வந்தது. இந்நிலையில் நயினாரின் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல் ஆகிவிட்டது.
இதனால்தான் இனி என்ன நடந்தாலும் சரி கூட்டணியில் இருந்து பாஜகவை கழட்டிவிடுவது என அதிமுக முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூட்டணியில் இருந்து விலகி தேர்தலை தனியாக சந்திக்க போவதாக பாஜக அறிவித்தது. இதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

நீண்டகாலமாகவே பாஜக கூட்டணி என்பது அதிமுகவுக்கு பெரும் சுமையாகவே இருந்துவந்தது என்றும், அதனால் அதிமுக இஸ்லாமிய- கிறிஸ்துவ வாக்குகளை இழக்க நேரிட்டது என்றும், பல நேரங்களில் அதிமுகவின் மூத்த அமைச்சர்களே வெளிப்படையாக விமர்சித்து வந்தனர். அதிமுக பாஜக கூட்டணியில் பல சாதகங்கள் இருந்தாலும் அதே அளவிற்கு பாதகங்களும் இருந்தது என்பதே அதிமுகவினரின் கருத்தாக இருந்து வருகிறது. அதாவது, அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்திருக்கும் பட்சத்தில் திருப்பூர், கோவை, சேலம் ஆகிய இடங்களில் திமுகவுக்கு சவால் கொடுத்திருக்க முடியும். கூட்டணி பிரிந்திருப்பதால் அதற்கு இப்போது சாத்தியமில்லாமல் போனது. பாஜக கூட்டணியில் இருந்ததால்தான் அதிமுக கும்மிடிப்பூண்டி காஞ்சிபுரத்தில் வெற்றி பெற முடிந்தது.
பாஜக கூட்டணியில் தான் விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது, அதனால்தான் அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் 40 சதவீத அளவிற்கு வாக்குகளையும் பெற்றது. இப்போது அதிமுக 75 தொகுதிகளில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது என்றால் அதற்கு பாஜக ஒரு காரணம் என அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில்தான், பாஜக மாநில பொதுச் செயலாளர், அதாவது அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நயினார் பேசினார் என்பதும், பாஜகவை கழட்டிவிட முன்கூட்டியே அதிமுக முடிவு செய்து விட்டது என்பதிலும் துளி அளவிலும் உண்மை இல்லை. ஏனென்றால் தன்னுடைய பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு விட்டார். அதிமுக ஏற்றுக்கொண்டு விட்டது, அதேபோல் கூட்டணியில் பாஜக வேண்டாம் என அதிமுக முன்னரே முடிவு எடுத்திருந்தால், எங்கள் கட்சி தலைவர்களுடன் அதிமுக தலைவர்கள் 4 மணி நேரம் பேசி இருக்க மாட்டார்கள். எங்கள் கட்சிக்கு தேவையான முக்கிய இடங்களை நாங்கள் கேட்டோம், அதை அவர்களால் கொடுக்க முடியவில்லை.

இதனால்தான் தனித்துப் போட்டி என அறிவித்தோம், மொத்தத்தில் அதிமுக பாஜக பிரிவு என்பது திமுக கூட்டணிக்கு சாதகமாக தான் இருக்கும். பாஜக வேட்பாளர்கள் 3000 வாக்குகள் பெற்ற இடத்தில் திமுக வேட்பாளர் வெறும் ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்கள் என்றால்கூட பாஜக வெளியேறியதால்தான் திமுக தோற்று விட்டது என்ற பேச்சுக்கள் தேர்தலுக்கு பிறகு வரச்செய்யும். திமுகவுக்கு சாதகம் என்று சொல்லுகிற அதே நேரம், திமுகவுக்கு எதிரான குரல் என்பது ஒரு முனையிலிருந்து வராமல், இரு முனையிலிருந்து வரப்போகிறது என்பது உண்மை. இதன்மூலம் திமுகவின் அராஜக போக்கை மக்களிடையே இரு கட்சிகளும் எடுத்துச்செல்லும் என அவர் கூறியுள்ளார்.
