ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவிலும் பத்தாம் இடம் பெற்று சாதனை படைத்த சேலம் வாழப்பாடி விவசாய குடும்பத்தை சேர்ந்த  மாணவி தர்மலா ஸ்ரீ. 

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவி தர்மலா ஸ்ரீ, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய  தேர்வில் 409 ஆவது இடத்தை பிடித்துள்ளார். சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறையில் படித்து முடித்த தர்மலா ஸ்ரீ, தமிழக அளவில் 10ம் இடத்தை பெற்றுள்ளார். 

இதனிடையே கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி தர்மலா ஸ்ரீ, தனது வெற்றியின் காரணத்தை சோனா கல்லூரி மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு வருங்கால மாணவர்கள் எவ்வாறு திகழ வேண்டும் என்று ஊக்குவித்துப் பேசினார். வெற்றி பெற்ற மாணவியை கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா பாராட்டி கௌரவித்தார்.

 

மேலும் நாட்டுப் பணிக்கும், மக்கள் பணிக்கும் சோனா கல்லூரி மாணவர்கள் அயராது சேவை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். நிகழ்ச்சியின்போது ஆடை வடிவமைப்புத் துறை பேராசிரியர்கள் உடனிருந்தனர்.