மீண்டும் மோடியா? பாகிஸ்தானிய ஊடக விவாதங்களில் ஒரே கதறல்..! செம அப்செட்டில் பாகிஸ்தானியர்கள்..! 

இந்திய பிரதமராக மீண்டும் மோடி தேர்வாக கூடாது என பாகிஸ்தானில் ஒளிபரப்பப்பட்டு வரும் தொலைக்காட்சி விவாதங்களில் பலரும் கதறி வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து நாளை முடிவுகள் வெளியாக உள்ளன. அதன்படி நாளை மாலையே அடுத்த இந்தியாவை ஆளும் பிரதமர் யார் என்பதை உறுதிப்படுத்த முடியும்.

இதற்கிடையில் இதுகுறித்து இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் பல்வேறு ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியா  இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு அசைவும் உலகம் முழுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு மத்தியில் மீண்டும் ஆளப்போவது பாஜக தான் என ஆதரவாக வெளிவந்துள்ளதால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் சற்று கலக்கமடைந்துள்ளனர்.

இதற்கிடையில் பாகிஸ்தான் மக்களும் இந்தியாவில் நடக்கும் தேர்தல் மற்றும் கருத்து கணிப்புகளை உற்று நோக்கி வருகிறார்கள். மீண்டும் பிரதமராக மோடி தேர்வானால் அது பாகிஸ்தானுக்கு நல்லது கிடையாது என அங்கு வாழும் மக்களின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதங்களில் பங்கு பெறும் அங்குள்ள அரசியல் புள்ளிகள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் மீண்டும் பிரதமராக மோடி தேர்வானால் பாகிஸ்தான் மீது கண்டிப்பாக சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடக்க வாய்ப்பு உள்ளது என கதறி வருகின்றனராம்.

இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் இந்தியா இடையான எல்லைப் பிரச்சனையில் சுமுகமான தீர்வு ஏற்பட மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாகிஸ்தானிய மக்கள் இதில் சற்று வேறுபட்டு மீண்டும் மோடி பிரதமரானால் பாகிஸ்தான் மீது surgical strike நடத்துவார்கள் என கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இவை அனைத்தையும் மீறி புல்வாமா தாக்குதலுக்கு பிறகு வான்வழி தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானி அபிநந்தன் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். அதற்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இவை அனைத்தும் எப்படி சாத்தியம் என்றால் அது மோடியின் வலிமை தான் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.அப்போது பாகிஸ்தானில் சில மணி நேரம் மட்டுமே இருந்த விமானி அபிநந்தனிடம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய அரசியல் பற்றியும் மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வியும் பலமுறை முன்வைத்ததாக வெளியான செய்திகளை பார்க்க முடிந்தது.
 
இந்த நிலையில் மீண்டும் மோடி வந்தால் அது பாகிஸ்தானுக்கு நல்லது கிடையாது என எதிர்கட்சியான காங்கிரசை விட பாகிஸ்தானிய மக்கள் கதறுகின்றனராம்.