தமிழிசை  அதிரடி பேச்சு.. நாட்டை காக்க மீண்டும் ஆட்சிக்கு மோடி வேண்டும்..! 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி சென்ற வாகனத்தைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தினர்.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி சென்ற வாகனத்தைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தினர்.இதில் 44 பேர் உடல் சிதைந்து சம்பா இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, "நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது; மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.