தமிழிசை ராஜினாமா ஏற்பு.! சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கிய குடியரசு தலைவர்
ஆளுநர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்த நிலையில், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குடியரசு தலைவர் கூடுதல் பொறுப்புகள் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தமிழிசை ராஜினாமா நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் முதல் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அரசியலில் மீண்டும் தமிழிசை களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கும் வகையில், புதுச்சேரி மற்றும் தேலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக மனம் உவந்து ராஜினாமா செய்து உள்ளேன் என்றார். ராஜினாமா செய்தது ஏன்.? இதே வேளையில் தனக்கு மக்களிடையே நேரடி பணியாற்றுவதே விருப்பம். இரண்டு மாநிலங்களிலும் மக்கள் ஆளுநராக தான் இருந்தேன். தீவிரமான மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காக எனது விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்து உள்ளேன். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரிடம் தெரிவித்து விட்டு தான் எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன். எனது விருப்பம் என்ன என்பது இருவருக்கும் தெரியும் அதனால் எனது விருப்பத்திற்கு அவர்கள் தடை விதிக்கவில்லை என கூறினார். சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு இந்தநிலையில் தமிழிசை ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் மாளிகைவெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை ராஜினாமா செய்துள்ளார்.அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளாதக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் பொறுப்பை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிப்பதாக குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. இதையும் படியுங்கள்
பிரேமலதா விஜயகாந்த் மீது 3 பிரிவில் திடீர் வழக்கு பதிவு செய்த போலீசார்.! என்ன காரணம் தெரியுமா.?