பிரேமலதா விஜயகாந்த் மீது 3 பிரிவில் திடீர் வழக்கு பதிவு செய்த போலீசார்.! என்ன காரணம் தெரியுமா.?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நன்னடத்தை விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகளிர்களுக்கு இலவச தையல் பயிற்சி டோக்கன் வழங்கிய புகாரில் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் சோதனை
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் கீழ் முழு கட்டுப்பாடும் வந்துள்ளது. இந்தநிலையில் பரிசு பொருட்கள் கொடுப்பது, ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் இதுவரை 2 கோடியே 81லட்சம் ரூபாய் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லபட்டதால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 26 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள்,போதை பொருள்கள்,18லட்சம் மதிப்பு உள்ள பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டது.
பரிசு டோக்கன் வழங்கிய பிரேமலதா
இந்த சூழ்நிலையில் பரிசு பொருட்களுக்கான டோக்கன் வழங்கியதாக வந்த புகாரின் பேரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பிறந்த நாள் விழாவையொட்டி சுமார் 300 மகளிருக்கு இலவசமாக தனியார் நிறுவனம் மூலம் ஆறு மாதம் டெய்லரிங் வகுப்பு பயிற்சி டோக்கன் வழங்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் இது போன்று இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டது தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேமலதா விஜயகாந்த் மீது சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
3 பிரிவில் பிரேமலதா மீது வழக்கு
அனுமதி இன்றி இலவச டோக்கன் வாங்கிய விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து விசாரணை செய்த கோயம்பேடு பேருந்து காவல் நிலைய போலீசார், பிரேமலதா விஜயகாந்த் இலவச டோக்கன் விவகாரத்தில் 300 மகளிர்க்கு இலவச டோக்கன் வழங்கியது உறுதியானதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் நிகழ்சி ஏற்பாடு செய்த காளிராஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது ஏன்.? அன்புமணி விளக்கம்