செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னை மெரினாவில் நடைபெறும் பேரணிக்குப் பிறகு நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை அறிவிப்பேன் என்று மு.க.அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, புதிய தலைவர் மற்றும் பொருளாள தேர்ந்தெடுப்பதற்காக வரும் 28 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது. ஆனால் கருணாநிதி மறைந்த மூன்றாம் நாளே அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி, திமுகவின் உண்மையான தொண்டர்கள் எல்லாம் என் பக்கம் இருக்கிறார்கள், எனது ஆதங்கத்தை கருணாநிதியிடம் தெரிவித்துள்ளேன் என திரியை கொளுத்திப் போட்டார்.

அப்போது முதலே ஸ்டாலின்-அழகிரி மோதல் முற்றத் தொடங்கியது. தனக்குப் பின்னால் ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்பதைக் காட்ட வரும் செப்ட்ம்பர் 5 ஆம் தேதி கருணாநிதி இறந்த 30 ஆவது நாள் சென்னையில் மிகப் பெரிய பேரணி ஒன்றை அழகிரி நடத்த உள்ளார்.

அப்போது தனது பலத்தை நிரூபிப்பேன் என்றும், கருணாநிதி தன்னிடம் கொன்னதை நிறைவேற்றுவேன் என்றும், அது என்ன என்பதை விரைவில் தெரிவிப்பேன் என்றும் அழகிரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மதுரைவிமானநிலையத்தில்மு.அழகிரிசெய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நேரம்வரும்போதுஎனதுஆதங்கத்தைவெளிப்படுத்துவேன் என தெரிவித்தார்.

சென்னையில்நடைபெறும்பேரணியில்தனது ஆதரவாளர்கள் ஒருலட்சம்பேர்பங்கேற்பார்கள் என்றும். செப்டம்பர் 5 ஆம்தேதிபேரணிக்குபிறகுதனது அடுத்த கட்டமுடிவைஅறிவிப்பேன் என்றும் அழகிரி தெரிவித்தார்.

நீங்கள் திமுகவில் மீண்டும் இணைவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு . தற்போதைக்குதிமுகவில்என்னைஇணைப்பதாகதெரியவில்லை என்று அழகிரி பதில் அளித்தார்.