நீண்ட இழுபறிக்கு தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டது. தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள் ஜனவரி 2ம் தேதி  எண்ணப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி அன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மறுநாள் நண்பகல் கடந்தும் நீடித்தது.

தேர்தலில் அதிகமான ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை வென்றிருந்தது. அதிமுக கூட்டணியும் சில மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக தற்போது வெளிவர தொடங்கியிருக்கிறது. இதுவரை மாவட்ட ஊராட்சிகளில் அதிமுக 3 மற்றும் திமுக 3 இடங்களை பெற்றுள்ளன. ஊராட்சி ஒன்றியங்களில் 17 ல் அதிமுகவும், 2ல் திமுகவும் வென்றுள்ளன.

தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை அதிமுக வென்றுள்ளது. அங்கு அக்கட்சியின் ப்ரீத்தா என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டம் என்பதால் அங்கு அதிமுகவின் வெற்றி முக்கியமாக பார்க்கப்படுகிறது. அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக சந்திரசேகர் வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுகவை சேர்த்தவர். கரூரிலும் அதிமுகவே வெற்றி பெற்றிருக்கிறது. அங்கு கண்ணதாசன் என்பவர் வென்றுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்ட தலைவராக திமுகவின் பால சுப்பிரமணியன் தேர்வாகி இருக்கிறார். அதே போல தஞ்சையில் திமுகவின் உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.