பாஜகவுடன் ரஜினிகாந்த் இணக்கமாக செல்வார் என்பதால் இதுவரை அதிமுக தலைமை அவரை விமர்சிக்காமல் அமைதி காத்து வந்தது.  ஆனால், பாஜக தலைமையை ரஜினிகாந்தே விமர்சித்த பின்னால் எடப்பாடி பழனிசாமி ரஜினி மீது கோபக்கணைகளை ஏவி வருகிறார். ஆகையால் இப்போது மெல்ல அஜித் கோஷத்தை எழுப்பி வருகிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

 

பொதுவாக அஜித் மீது அதிமுக அமைச்சர்களுக்கு ஏக பாசம். காரணம் ஜெயலலிதா இருக்கும்போது அஜீத் மீது தனிப்பாசம் வைத்திருந்தார். அஜித்- ஷாலினி  கல்யாணத்திற்கு சென்றிருந்த ஜெயலலிதா  அங்கு வெகுநேரம் இருந்து தாயுள்ளத்துடன் மணமக்களை வாழ்த்தி விட்டுச் சென்றார். அவ்வப்போது ஜெயலலிதா அஜித்தை அழைத்து தனிப்பட்ட முறையில் நலம் விசாரிப்பதையும், அஜித் ஜெயலலிதா மீது வைத்திருந்த அலாதி மரியாதையையும் அதிமுக நிர்வாகிகள் உணர்ந்திருந்தனர். 

ஜெயலலிதா மறைந்த பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்த வெளிநாட்டில் இருந்து விமாத்தில் இறங்கி நேரடியாக அவரது நினைவிடத்துக்கு அதிகாலை அஜித் தனது மனைவியுடன் சென்றதையும் அதிமுகவினர் உணர்ச்சிப்பூர்வமாக பார்த்தனர். அதேபோல் கருணாநிதிக்கு நடந்த பவள விழாவில் அஜித் தைரியமாக கருணாநிதி முன்பே பேசியதை இப்போதும் மெச்சி வருகிறார்கள் அதிமுக நிர்வாகிகள். இதையெல்லாம் வைத்து அஜித் ரசிகர்கள் தங்கள் பக்கம் கொண்டுவர அதிமுக தலைமை பல காலமாக முயன்று வருகிறது. 

இப்போது ரஜினி அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய், கமல், ரஜினி எல்லாம் அரசியல்களத்திற்கு வரும்போது ஏன் தல அஜித் வரக்கூடாதா? அற்புத மனிதரான தல வரக்கூடாதா..?  நாளை எதுவேண்டுமானாலும் நடக்கலாம்’’எனக் கூறி உள்ளார். 

ரஜினி எதிர்ப்பு அரசியலை முறியடிக்கவே அஜித்தை இப்போது அதிமுக அமைச்சர்கள் கையில் எடுத்து இருக்கிறார்கள். அஜித் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்க இனி அஜித் புராணம் பாடப்போகிறார்கள். அஜித் ரசிகர்கள் விஸ்வாசத்துக்கு பேர் போனவர்கள். அவர்களை பொறுத்தவரை அஜித்தை யார் புக்ழந்து பேசினாலும் அவர்கள் மீது கரிசனம் காட்ட்டி விடுவார்கள். அந்த அளவிற்கு வெறித்தனம் காட்டுவார்கள். இதையெல்லாம் உணர்ந்தே அதிமுக தலைமை ரஜினி ஃபார்முலாவை உடைக்க அஜித்தை வைத்து பக்கா ஃப்ளான் போட்டு வருவதாக கூறப்படுகிறது.