admk symbol only for sasikala

டெல்லியில் நடைபெற்று வரும் தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் சாதகமான பதில் வரும் என தெரிவிக்கப்பட்டதால் பரோல் முடிவை சசிகலா திரும்பப் பெற்றதாக பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கே அளிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணி சார்பில் அளிக்கப்பட்ட புகாரினைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி இரு தரப்பினரும் தங்களது முதற்கட்ட வாதத்தை நிறைவு செய்து இரண்டாம் கட்ட வாதத்தை முன்னெடுத்து வருகின்றனர். 

சசிகலா பரோல் விவகாரம்

டெல்லியில் நடைபெற்று வரும் விசாரணைக்கு ஆஜராக தனக்கு பரோல் வழங்கும்படி சசிகலா சார்பில் பரப்பன அக்ரஹாரா சிறைநிர்வாகத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் பரோலில் விடுவதற்கு இந்தக் காரணம் உகந்ததாக இல்லை என்று கூறிய அதிகாரிகள் பரோல் வழங்க மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. தனக்கு எப்படியாவது பரோல் கிடைத்துவிடும் என்று நினைத்த சசிகலாவுக்கு சிறைத்துறையின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை அளித்ததாம். 

சாதகமான தகவல் வரும் 

மன உளைச்சலோடு சிறையில் இருந்த சசிகலாவுக்கு ஆறுதல் தரும் விதமாக நற்செய்தி ஒன்று அறிவிக்கப்பட்டதாம்... டெல்லியில் இருந்து நமக்கு சாதகமான பதில் வரும். அதனால் பரோல் கிடைக்கலைன்னு கவலைப்பட வேண்டாம் என்பதே அந்தத் தகவல்... இதனைக் கேட்டு சசிகலாவின் முகம் மலர்ச்சி அடைந்ததாகக் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்...