Asianet News Tamil

மன்னிப்பு கேட்பதில் கூட இவ்வளவு ஆணவமா?... ஆ.ராசாவின் அறிக்கையால் கொந்தளிக்கும் அதிமுக!

இன்னும் ஒருபடி மேலேபோய் முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளப்படியே காயப்பட்டதாக உணர்வாரேயானால் எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவித்து கொள்வதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை .

ADMK Shocking about Rasa apology Statement
Author
Chennai, First Published Mar 29, 2021, 5:45 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் எம்.பி. ஆ.ராசா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், திமுக தலைவர் ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசியது மிகப்பெரிய சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.அதாவது ஸ்டாலின் முறைப்படியாக திருமணம் நடந்து 300 நாட்களுக்கு பிறகு பிறந்த  குழந்தை, ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கள்ள உறவில் பிறந்த குழந்தை என மிகவும் கீழ்தரமாக விமர்சித்தார். 


தமிழக முதல்வருக்கே இந்த நிலையா? என கொதித்தெழுத்த மக்கள் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்று சென்னையில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு சாமானியன் முதல்வர் என்பதால் என்னவெல்லாம் பேசுகிறார்கள் பாருங்கள். ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் தாய்தான் உயர்ந்த ஸ்தானம். அப்படிப்பட்ட தாயைப் பற்றியே தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். தாயப் பற்றி யார் தரக்குறைவாக பேசினாலும் அவர்களை ஆண்டவன் தண்டிப்பான் என கண்ணீர் மல்க பேசினார். 

முதல்வரின் உருக்கமான பேச்சுக்கு பிறகு திமுகவினரிடையே ஆ.ராசாவிற்கு எதிர்ப்பு கிளம்பியது. திமுக வாக்கு வங்கிக்கே ஆ.ராசாவின் ஆணவப்பேச்சு ஆப்பு வைத்ததால், தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்ததோடு, அறிக்கை வெளியிட்டும் மன்னிப்பு கோரியுள்ளார் ஆ.ராசா. அதில்,இரண்டு நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி அவர்களை பற்றி நான் பேசியது குறித்து சமூக வளைதளங்களிலும் ஊடங்களிலும் பரப்பபட்டு வரும் செய்திகளுக்கு விளக்கமளித்தேன். தி.மு.க.வின் தலைவர் வணக்கத்திற்குரிய ஸ்டாலின் அவர்களின் அரசியல் ஆளுமையையும் தமிழக முதல்வர் மாண்புமிகு பழனிச்சாமி அவர்களின் ஆளுமையையும் பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி உவமானமாக தேர்தல் பரப்புரையில் நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தறிக்கப்படுவதை விளக்கினேன்.

என்றாலும், அதுகுறித்து விவாதம் தொடர்ந்ததால் நேற்று கூடலூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி குறித்தோ, அவரது அன்னையார் குறித்தோ புகழுக்கு களங்கம் விளைவிக்க நான் எண்ணியதில்லை என்றும், இரு தலைவர்கள் குறித்த அரசியல் ஆளுமை பற்றி நான் பேசினேன் என்று நானும் ஒரு தாயின் எட்டாவது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கம் அளித்தேன். இதற்கு பிறகும், முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டு கலங்கினார் செய்தி நாளிதழ்களில் படித்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்ற இடபொறுத்தமற்று சித்தறிக்கப்பட்டு தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக என் அடிமனதின் ஆழத்திலிருந்து எனது வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். இன்னும் ஒருபடி மேலேபோய் முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளப்படியே காயப்பட்டதாக உணர்வாரேயானால் எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவித்து கொள்வதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை .

முதல்வருக்கும், அவரது கட்சி காரர்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது, எனது பேச்சு இரண்டு தலைவர்களை பற்றிய தனி மனித விமர்சனம் இல்லை. பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமை குறித்த மதிப்பிடும் மற்றும் ஒப்பிடும் தான். முதல்வர் பழனிசாமி காயப்பட்டு கலங்கியதற்காக எனது மனம் திறந்த மன்னிப்பை தெரிவிக்கும் அதே வேலையில் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்பதில் கூட நான் தவறாக பேசவில்லை. இரு பெரும் அரசியல் ஆளுமைகளை ஒப்பீடு மட்டும் தான் செய்தேன், உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமி மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோரிகிறேன் போன்ற வார்த்தைகளை ஆ.ராசா பயன்படுத்தியுள்ளது அதிமுகவினரை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios