Asianet News TamilAsianet News Tamil

நாடாளுமன்றத் தேர்தல்… ஹெவியா களம் இறங்கிய அதிமுக …. கூட்டணி குறித்து பேச குழு நியமனம் !!

மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும்,  பிரசாரத்தை முறைப்படுத்தவும் அதிமுக சார்பில்  தனித்தனியே குழுக்களை நியமித்துள்ளது.

 

admk politcal committee for parliment election
Author
Chennai, First Published Jan 24, 2019, 8:58 AM IST

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தயாராக உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க., - காங்., கூட்டணி உருவாகி உள்ளது. இதில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர உள்ளன. இதையடுத்து அந்த கூட்டணியில் சீட் ஷேரிங் உள்ளிட்டவை குறித்து  பேச்சு நடத்த திமுக  சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

admk politcal committee for parliment election

 

இந்நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுகவும் தயாராகி வருகிறது. அதிமுகவுடன்  பாஜக, பாமக, தேமுதிக,புதிய தமிழகம் போன்ற கட்சிகள், கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

 

இது  தொடர்பாக, ரகசிய பேச்சும் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிமுக  சார்பில், கூட்டணி கட்சிகளுடன், தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

admk politcal committee for parliment election

அதில், துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அமைப்பு செயலர், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 

அதேபோல, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், அமைப்பு செயலர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், முன்னாள், எம்.பி., ரபி பெர்னார்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

admk politcal committee for parliment election

அதிமுக  வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரத்தில் ஈடுபடுவோரை ஒருங்கிணைத்து, பிரசார பணிகளை கவனிக்க, ஏழு பேர் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள், வளர்மதி, கோகுலஇந்திரா, வைகைச்செல்வன், மருத்துவ அணி செயலர், வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios