வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. இதில் அதிமுக – பாமக இடையேதான் முதன் முதலில் கூட்டணி  ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பாமக சார்பில் தைலாபுரத்தில் விருந்த அளிக்கப்பட்டது. இந்த அணியில்  பாமகவுக்கு  7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த கூட்டணியில் தேமுதிகவும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேமுதிக இந்த கூட்டணிக்குள் வந்தால் பாமக ஒரு சில தொகுதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது அதிமுக – தேமுதிக பேச்சு வாத்தையில் இன்னும் உடன்பாடு ஏற்படாததால் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் தான் இன்று அமைச்சர்கள் சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய இருவரும் தைலாபுரம் சென்று ராமதாசை சந்தித்தனர். ஏன் இந்த திடீர் சந்திப்பு என்பது குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஒரு வேளை தொகுதி மாற்றம் குறித்து பேசப்பட்டதா ? அல்லது தேர்தல் செலவுக்ள் குறித்து பேசப்பட்டதா ? நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்பது குறித்து பேசப்பட்டதா என்பழ குறித்து உறுதியான தகவ்ல எதுவும் கிடைக்கவில்லை.