Asianet News TamilAsianet News Tamil

அன்று ஆட்சியை அடகுவைத்தவர்கள் இன்று கட்சியை அடகுவைத்துவிட்டு தவிக்கிறார்கள்... அதிமுகவை விமர்சித்த உதயநிதி!!

அன்று ஆட்சியை அடகு வைத்தவர்கள் இன்று கட்சியை அடகுவைத்து விட்டு தவித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுகவை விமர்சித்துள்ளார். 

admk pawned the govt then and now pawning the party says minister udayanidhi
Author
First Published Jan 22, 2023, 8:54 PM IST

அன்று ஆட்சியை அடகு வைத்தவர்கள் இன்று கட்சியை அடகுவைத்து விட்டு தவித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுகவை விமர்சித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், அன்று சுயலாபத்துக்காக டெல்லியிடம் ஆட்சியை அடகுவைத்தவர்கள், இன்று கட்சியை அடகுவைத்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துபவர்கள், இன்று அவரது பெயரையே மறந்துவிட்டனர். நாம் ஆளுநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். தமிழகத்தின்மீது அக்கறை உள்ளவர்கள் யார் என்பதை அவர் அடையாளம் காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார்.? கடைசியில் நடந்த திடீர் ட்விஸ்ட் !

ஒன்றிய பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் ஆகிறது. அவர்கள் செய்தது என்னவென்று பார்த்தால், மக்களிடையே பிரிவினையை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. வடமாநிலங்களில் எம்பி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர், அது தமிழ்நாட்டில் நடக்காது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். அதன் முன்னோட்டமாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் காங்கிரஸ் கட்சியை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: ஆதாரை இணைப்பதால் இலவச மின்சார திட்டம் ரத்தாகுமா? விளக்கம் அளித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் எதிர்மறை பிரசாரத்தை துவங்கியுள்ளனர். அதை நாம் முறியடிக்க வேண்டும். இந்த கூட்டம்தான், நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கான முதல் கூட்டம். ஒடிசா மாநிலத்தில் விளையாட்டு துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1500 கோடி ஒதுக்குகின்றனர். ஆனால், தமிழகத்துக்கு ரூ.25 கோடிதான். இந்தாண்டு பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு அதிக நிதி ஒதுக்கும்படி முதல்வரிடம் டி.ஆர்.பாலு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios