தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 24 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மூன்று நாட்கள் கழித்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இரண்டு தொகுதிகளிலும் தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 39,654 வாக்குகள் பெற்றிருக்கிறார். திமுக வேட்பாளர் 24,454 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 15,200 ஆக இருக்கிறது. நாம் தமிழர் வேட்பாளர் 982 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 9381 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 3033 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் 6348 வாக்குகள் வாங்கியுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 274 வாக்குகள் பெற்றுள்ளார்.

இரு தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை வகிப்பதால் அக்கட்சியினர் உற்சாகத்தில் இருக்கின்றனர். சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் திரண்டு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதே நேரத்தில் திமுக அலுவகமான அண்ணா அறிவாலயம் கொண்டாட்டமின்றி சோகமாக காணப்படுகிறது.