Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதியை புதைக்க இடம் மறுத்த அதிமுக, சிலைக்கும் அனுமதி மறுப்பு..!! கொதிப்பில் உடன் பிறப்புகள்..!!

புகழ்மிகு மனிதருக்கு மதுரையில் சிலை வைக்க அனுமதி கோரி 2018 செப்டம்பர் மாதமே மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆளும் கட்சியின் தலைவர்களுக்கு சிலை வைக்க அனுமதி வழங்கும் அரசு நிர்வாகம்,  கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி அளிக்கவில்லை. 

admk not allow for dmk ex chief  karunanithi  dmk cadre's file petition at Madurai high court
Author
Madurai, First Published Dec 16, 2019, 5:01 PM IST

மதுரையில் திமுகவின் முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க மனுதாரர் கோரும் இடத்திலோ அல்லது வேறு  எந்த இடத்திலோ அனுமதிப்பது குறித்து தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.செயலாளர் கோ.தளபதி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.  

admk not allow for dmk ex chief  karunanithi  dmk cadre's file petition at Madurai high court

அதில், " தமிழகத்தில் 1969 முதல் 2011 வரை 5 கட்டமாக முதல்வராக இருந்தவர் டாக்டர் மு.கருணாநிதி.  வெற்றி பெற்ற அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற புகழுக்குரியவர். அவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது 94 ஆவது வயதில் உயிரிழந்தார். அத்தகைய புகழ்மிகு மனிதருக்கு மதுரையில் சிலை வைக்க அனுமதி கோரி 2018 செப்டம்பர் மாதமே மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆளும் கட்சியின் தலைவர்களுக்கு சிலை வைக்க அனுமதி வழங்கும் அரசு நிர்வாகம்,  கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி அளிக்கவில்லை.  ஆகவே, திமுகவின் முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு, மதுரையில் சிலை வைக்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 

admk not allow for dmk ex chief  karunanithi  dmk cadre's file petition at Madurai high court

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், மதுரையில் மனுதாரர் கோரும் இடத்திலோ அல்லது வேறு  எந்த இடத்தில், திமுகவின் முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு, சிலை வைக்க அனுமதிக்க இயலும் என்பது குறித்து தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios