மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை தமிழகத்தில் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக  இருந்தது அதிமுக என்பது  எல்லோருக்கும் தெரியும், அவர் மறையும்வரை  யாரையும்  எதற்காகவும் தேடிப்போய், மற்றவர் வீட்டுப்படியேறியவரில்லை ஜெயலலிதா, என்பதுதான் அவரின் வரலாறு. கூட்டணிக்கு வாய்ப்புக்கேட்டு போயஸ் தொட்டத்து வாசலில் கதியாய் காத்திருந்து அவரின் கருணை கிட்டினால் அதிமுகவுடன் கூட்டணி என்பது தான் மற்ற உதிரிக்கட்சிகளில் நிலை. ஆனால் இப்போது அது தலைகீழாக மாறியுள்ளது. யாரெல்லாம் அதிமுகவின் கூட்டணிக்காக காத்திருந்தனரோ அவர்களின் வீடுகளுக்கேப்போய் அரதவு கேட்கும் நிலை  இப்போது அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. 

அது மட்டுமின்றி, பிற கட்சிகளின் இரண்டாம் கட்டத்தலைவர்கள், சாதிக்கட்சித் தலைவர்கள் என பாகுபாடின்றி அவர்களின் வீட்டுக்கேப்போய் ஆதரவு கோரிவருகிறது அதிமுக. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை துணைமுதலமைச்சரே அவரின்  பாலவாக்கம் வீட்டுப் படியேறிப்போய் அதரவு கேட்டது,  மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை கூட்டணிக்காக அமைச்சர் பட்டாளம் அவரின் அலுவகத்திற்கே போய் பேச்சு வார்த்தை நடத்தியதெல்லாம் அரங்கேறியது.

இந்நிலையில் அதையெல்லாம் தாண்டி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் திரு. ஜான் பாண்டியன்  அவர்களை அவரது இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் சந்தித்து ஆதவு கோரியுள்ளனர். அதில் மாண்புமிகு அமைச்சர்  தங்கமணி,  திண்டுக்கல் சீனிவாசன்,  எம். ஆர். விஜயபாஸ்கர், டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், ராஜலக்ஷ்மி, கடம்பூர் ராஜு,ஆகிய 7அமைச்சர் பட்டளமே ஆதரவு கோரியது.நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற இந்த சந்திப்பில் அவர்களுடன் விளாத்திக்குளம் எம். எல். ஏ சின்னப்பன், டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், நாடாளுமன்ற மேலவை  உறுப்பினர்  விஜிலா சத்யானந்த். மாவட்ட செயலாளர் கணேசராஜா, சுதா பரமசிவம்,சங்கரலிங்கம்ஆகியோர்இருந்தனர். 

 

அப்போது அவர்களிடம் தங்களின் முக்கிய கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணை குறித்து என்னாச்சு என்று ஜான்பாண்டியன் கேள்வியெழுபினார். 7 பிரிவுகளை உள்ளடக்கி  தேவேந்திரகுலவேளாளர் என்ற அரசாணை அறிவிப்பது தொடர்பாக கடந்த தேர்தலில் கொடுத்த  வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும், அதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்கவேண்டும் என்று ஜான்பாண்டியன் வலியுறுத்தினார்.  முதல்வரிடம் பேசி பின்பு உடனடியாக சொல்வதாக அமைச்சர்கள் உறுதியளித்துவிட்டு சென்றனர். விரைவில் தமிழக மக்கள் முனேற்றக் கழக தலைவரை  தமிழக முதல்வர் சந்திக்க உள்ளதாகவும் தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக் குறித்து நல்ல முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.