பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19ம் தேதி தாம்பரம் அருகில் உள்ள சாய்ராம் தனியார் கல்லூரியில் எக்கச்சக்க பிரச்சனைகளுடன் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழா இப்பொழுது புது பிரச்சனை உருவாகியுள்ளது. இசை வெளியீட்டு விழாவிற்கு கல்லூரியில் அனுமதி அளித்தது ஏன்? என உயர் கல்வித்துறை நேரில் வந்து ஆய்வு செய்து நோட்டீஸ் கொடுத்துள்ளது. 

இந்த விழாவில் பேசிய தளபதி விஜய்“சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமானவர்களை விட்டுவிட்டு பேனர் பிரிண்ட் செய்தவர்களையும், லாரி டிரைவரையும் கைது செய்திருக்கிறார்கள்.  அதிலும் விஜய் சொன்ன, குட்டி கதையில் எவனை எங்க உட்கார வைக்கணுமோ அவனை அங்கங்க கரெக்ட்டா உட்கார வைக்கணும்" என விஜய் சொன்னது அதிமுகவினரை கொந்தளிப்பின் உச்சத்தில் நிறுத்தியது.

கடைசியாக, என்னுடைய ஃபோட்டோக்களை கிழித்தாலோ, பேனர்களை உடைத்தாலோ நான் கவலைப்படமாட்டேன். ஆனால், என் ரசிகர்கள் மீது கை வைத்தால் அது உங்களுக்கு நல்லதல்ல, அவர்களது அன்பின் அடையாளமாகவே அவர்கள் இப்படி செய்கிறார்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அது அவர்களைக் காயப்படுத்தும் என விஜய் உள்ளே பேசிக் கொண்டிருக்கும் போதே , கல்லூரிக்கு வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்களின் மீது பயங்கர தடியடி சம்பவத்தை நடத்திக்கொண்டிருந்தது போலீஸ்.

இந்த நிலையில் பிகில் இசை வெளியீட்டு விழா நடந்த கல்லூரிக்கு உயர் கல்வித் துறை விளக்கம் கேட்டு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன்? எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டது? அரசியல் தொடர்பான பேச்சுக்கள் அடங்கிய விழாவை நடத்த கல்வி நிறுவனத்தில் இடம் உண்டா என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

கல்லூரி தரப்பு கூறுகையில் அந்த இடம் கல்லூரிக்கு சொந்தமானது இல்லை என கூறியுள்ளது. ஆனாலும் அரசாங்கம் விஜய்க்கு ஒரு டெமோ காட்டாமல் விடுவதாக இல்லை, ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் கோளாறுகள், ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சாலையிலேயே இருந்த ரசிகர்களை போலீஸ் தடியடி நடத்தியது. நான்காயிரம் பேர் மட்டுமே அமரும் இடத்தில் 10 ஆயிரத்துக்கு அதிகமான ரசிகர்கள் குவிந்ததால் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு. இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசாங்கத்தை காண்டாக்கும் விதமாக பேசியது என  தாறுமாறு கடுப்பில் இருக்கும் அமைச்சர்கள் டீம். 

இந்த வாட்டி விஜய்யை விடவே கூடாது, தலைவா படத்தை விட பயங்கரமா ஒரு பிகில் படத்துக்கு ஒரு சம்பவம் பண்ணி காட்டணும், இனி அரசாங்கத்தை  எதிர்க்கணும்ன்னு மட்டுமில்ல, எதிரா யோசிக்க கூட நடுங்குற மாதிரி ஒரு டெமோ காட்டியே ஆகணும்.