ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்,  இதில் உரையாற்றிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வருகிற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்றார்.  தேர்தலை நடத்த அதிமுக பயப்படுகிறது என்று சொன்ன திமுக இப்பொழுது பயத்தில் புகாரி ராகம் பாடி கொண்டிருக்கிறது. இன்று போராட்டம் என்று அறிவித்து மக்களை குழப்பி மக்கள் மனதில் மதத்தைப் பரப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க திமுக முயற்சிக்கிறது . 

வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது அதிமுகவில் குழப்பம் வரும் என்று நினைத்தவர்களுக்கு மத்தியில் அமைதியான முறையில் வேட்புமனுத்தாக்களை நாம்  செய்து முடித்திருக்கிறோம்.  மக்களை சந்திக்க திமுகவின் தலைவர் ஸ்டாலின் பயப்படுகிறார் . இப்போது அவர் எதைச் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க முடியும். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுக்கே வெற்றி கிடைக்கப் போகிறது.  2021ல் நடைபெறுகிற சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவின் பக்கமே  வெற்றி  இருக்கும் என்பதில் மாற்றமில்லை எனத் தெரிவித்தார் . நாங்கள் மதிக்கத்தக்க கூடிய தோழர் நல்லகண்ணு போன்றோர் மீது மத்திய மாநில அரசுகள் மற்றும் பிரச்சனைகளுக்காக போராடுகிற பொழுது தேசத்துரோக வழக்குப் போடுவது கிடையாது. 

வைகோவிற்கு தெரியும் எந்த அரசு தேசத்துரோக வழக்கு போடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் . வேண்டுமென்றால்  வைகோவிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.  எங்கள் கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும்  இல்லை.  திமுகவை போல இது குடும்ப கட்சியல்ல உழைப்பவர்களுக்கு அதிமுகவில் தேவையான பதவிகள் கிடைக்கும் என்பது உண்மை.எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உட்பட எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுக  ஆளும் கட்சி என்ற காரணத்தினால்  அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த அதிமுகவை விமர்சித்து வருகின்றனர்.