பிஜேபி - அதிமுக தரப்பு தேமுதிக தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், ஆனால் பாமகவுக்கு கொடுத்ததைவிட ஒரு தொகுதியாவது அதிகமாக வேண்டும் என அடம்பிடித்ததால் இழுபறி ஏற்பட்டதை அடுத்து, திமுகவிற்கு இழுக்க ஸ்டாலின் நேரடியாகவே களத்தில் இறங்கினார்.  ஆனால், 4+1 மட்டுமே கொடுக்க முடியும் என சொன்னதால் திமுகவில் சேராமல் மவுனம் காத்து வந்தது.

அதனைத் தொடர்ந்து விஜயகாந்தை திமுக பக்கம் போனால், சுமார் 36 தொகுதிகளில் தோல்வியடையும் என்றும், சுமார் 20 தொகுதி வரை டெபாசிட் பறிபோகும் நிலை ஏற்படும் என்ற சூழல் உருவாகிவிடும் என்பதால் பிஜேபி தரப்பில் அழுத்தம் கொடுத்ததால், நேற்று அவசர அவசரமாக விஜயகாந்தை தேடி வந்தனர் துணை முதல்வரும், அமைச்சர் ஜெயக்குமாரும் பிரேமலதாவிடம் பேசும் போது, “மெகா கூட்டணின்னா எல்லாருக்கும் விட்டுக் கொடுத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்,  உங்களுக்கான முக்கியத்துவம் எப்போதும் குறையாது என நம்பிக்கை தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிமுக கூட்டணிக்கு தேமுதிக அதிமுகவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்ததாக சொல்லப்பட்டது, திமுக நேற்றே தனது கூட்டணியை இறுதி செய்யத் தொடங்கியது. ஒரு வேளை தேமுதிக வந்தால் ஒரு இடம் அளிக்கலாம், காங்கிரஸிடமிருந்து 2 தொகுதிகளை வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்து காக்க வைக்கப்பட்டிருந்த கூட்டணிக் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் அளித்ததன் மூலம், தேமுதிக - திமுக கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. (தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 இடங்களில் காங்கிரஸ் 10 இடங்கள், விசிக 2 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்கள், ஐஜேகே மற்றும் ஐயூஎம்எல் கட்சிக்கு 1, கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது)

இந்நிலையில், தேமுதிக 7 லோக்சபா இடங்கள், ஒரு ராஜ்ய சபா சீட் கேட்டதால், பாஜக - அதிமுக தரப்பு 5 லோக்சபா இடங்கள் மட்டுமே தர முடியும் என்று சொன்னதால், டென்ஷானான தேமுதிக இடையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இப்போது திமுக கூட்டணி கட்சிகளுக்கு தேவையான தொகுதிகளை பிரித்துக் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு நாள் குறிக்க இருப்பதால் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

தற்போது உள்ள சூழலில்,  விஜயகாந்த் இனி அதிமுக குடுக்கறத வாங்கிக்க வேண்டியது தான், வேறு வழியே இல்லை, மூன்றாவது கூட்டணி அமைத்தால் மக்கள் நல கூட்டணி அமைத்து மண்ணைக் கவ்வியதைப்போல மரண அடி ஏற்படும் பயம் இருப்பதால், அப்படி ஒரு முடிவெடுக்கும் வாய்ப்பும் இல்லை, தினகரன் பக்கமும் செல்ல வாய்ப்பில்லை, நாட்களை கடத்தி திமுகவை திசை திருப்பி விஜயகாந்துக்கு அல்வா கொடுத்து அசால்ட் மூவ் செய்திருப்பது விஜயகாந்த் தரப்பை, பயங்கர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.