தமிழ்நாட்டில் நடந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலின் தற்போதைய நிலவரப்படி  திமுக 12 இடங்களிலும், அதிமுக 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

சாத்தூர், சோளிங்கர், சூளூர்  ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை, அரூர் ஒசூர், மானாமதுரை,  விளாத்திகுளம், ஆகிய 10 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடப்பிடாரம், குடியாத்தம், திருவாரூர், பாப்பிரெட்டிபட்டி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், பெரியகுளம், பரமக்குடி, பெரம்பூர் பூந்தமல்லி, திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் அதிமுக முன்னிலையில் இருக்கும் செய்திகளை கேட்பதற்காக அதிமுக அலுவலகத்தில், பிரமாண்ட LED ஸ்கிரீன் பிரத்தியமாக ஏற்படு செய்யப்பட்டிருந்தது. 

ஆனால் தொடர்ந்து திமுக அணியினர் முன்னிலையில் இருந்து வருவதால், அதிமுக அலுவலகத்தில் உள்ள, LED ஸ்கிரீன் ஆன் செய்யப்படாமல் உள்ளது. அதிமுக கட்சி தொண்டர்கள் தேர்தல் நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள ஆன் செய்யப்படாமல் இருக்கும் LED ஸ்கிரீன் முன்பு அமர்ந்து காத்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.