நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி... எடப்பாடி பழனிசாமி தகவல்!!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் அதிமுக செயலாளர் இளங்கோவன் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது படத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர காவல்துறை முன்வர வேண்டும்.
இதையும் படிங்க: வன்னியா்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி குடும்பத்துடன் கடிதம்!!
தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: அண்ணாமலையை விட்டுடாதிங்க... திமுகவிடம் வலியுறுத்திய காயத்ரி ரகுராம்!!
எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளரான பின்பு நடைபெற்ற இந்த முதல் கூட்டத்தில் திமுக அரசை கண்டிக்கும் தீர்மானங்கள் உட்பட 15 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் தமிழக பாஜக மற்றும் அதன் தலைவர் அண்ணாமலையுடன் அதிமுகவுக்கு மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விவிகளை எழுப்பியுள்ளது.