Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமலையை விட்டுடாதிங்க... திமுகவிடம் வலியுறுத்திய காயத்ரி ரகுராம்!!

திமுக அவதூறு வழக்கு தொடர்ந்து அண்ணாமலை அந்த ரூ.500 கோடியை பி.எம். கேர்ஸ் நிதிக்கு கொடுப்பாராம். இது என்ன நியாயம்? என்று நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். 

dont leave annamalai says gayathri raghuram to dmk
Author
First Published Apr 17, 2023, 6:55 PM IST | Last Updated Apr 17, 2023, 6:55 PM IST

திமுக அவதூறு வழக்கு தொடர்ந்து அண்ணாமலை அந்த ரூ.500 கோடியை பி.எம். கேர்ஸ் நிதிக்கு கொடுப்பாராம். இது என்ன நியாயம்? என்று நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக பைல்ஸ் என்கிற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உட்பட திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதை அடுத்து உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், சமூக ஊடக பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவினை நீக்க வேண்டும். இழப்பீடு தொகையாக ரூ.500 கோடி வழங்க வேண்டும் என்று தெரிவித்ததோடு இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்திற்குள் இவற்றை செய்ய தவறினால் அண்ணாமலைக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என திமுக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடக தேர்தல்: பாஜக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இதற்கு ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் நான் பெற்றுக் கொண்டதாக ஆதாரம் அற்ற பொய் குற்றச்சாட்டை என் மீது சுமத்தி இருக்கிறார் ஆர் எஸ் பாரதி. என் மீதும் பாஜக கட்சியின் மீதும் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்காக 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருகிறேன். இதை நான் பி .எம். கேர் நிதிக்கு செலுத்த விரும்புகிறேன் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் என் மீதும் என் கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரம் மற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க விட்டால் ஆர். எஸ். பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனிடையே தனிப்பட்ட குழப்பத்திற்காக மத்திய அலுவலகத்தையோ பிரதமரையோ இழுக்க முடியாது என நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலையை சாடியுள்ளார். இதுக்குறித்து அவரது டிவிட்டர் பதிவில், திமுக, அண்ணாமலையை விட்டுடாதிங்க. பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு, தன்னிடம் 4 ஆடுகள் மட்டுமே உள்ளது என்று கூறினால், அண்ணாமலையின் நண்பர்கள் பெரிய பணக்காரர்கள்.

இதையும் படிங்க: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பிரபாகரன் கோரிக்கை

அந்த ரூ.500 கோடியை அவரது தாராள நண்பர்களை கொடுக்கச் சொல்லுங்கள் அல்லது அவர் தனது நண்பர்களைக் கொடுக்கச் சொல்வார். திமுக அவதூறு வழக்கு தொடர்ந்து அண்ணாமலை அந்த ரூ.500 கோடியை பி.எம். கேர்ஸ் நிதிக்கு கொடுப்பாராம். இது என்ன நியாயம்? இது என்ன போங்கு? பி.எம். கேர்ஸ் நிதியை எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கேலி செய்கிறது. மோசடி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். இப்போ அண்ணாமலை பி.எம். கேர்ஸ் நிதியை தேவையில்லாமல் இழுத்து வருகிறார். பித்தலாட்டம் அண்ணாமலை  என்கிறார். அவர் மேலும், ஆருத்ரா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள்.பிறகு எங்கே தப்பிக்கப் பார்க்கிறாய்? அமெரிக்காவா? அண்ணாமலை, பிரதமரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அண்ணாமலையின் பித்தலாட்டம் முட்டாள்தனத்தை காப்பாற்றுவது பிரதமரின் வேலையா? பிஜேபியின் முக்கிய தலைவர்களின் பெயர்களை விருப்பப்படி பயன்படுத்தி பிரதமர் பெயர் விருப்பப்படி பயன்படுத்தி தப்பிப்பதா?பாஜக தேசிய கட்சி என்பதை அண்ணாமலை மறந்துவிட்டார். அவர் தனது தனிப்பட்ட குழப்பத்திற்காக மத்திய அலுவலகத்தையோ பிரதமரையோ இழுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios