விக்கிரவாண்டியைத் தொடர்ந்து நாங்குநேரியிலும் அதிமுக முன்னிலை வகித்துவருகிறது.


விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.  நாங்குநேரி தொகுதியில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  முதல் கட்ட முன்னிலை நிலவரமே சுமார் 8.50 மணிக்குதான் வெளியாயின. முதல் கட்டமாக வெளியான தகவலில் அதிமுக வேட்பாளர் 412 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 234 தொகுதிகள் பெற்று பின் தங்கியுள்ளார்.


தொடர்ந்து இரு தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியை முந்தி அதிமுக கூட்டணி முன்னிலைப் பெற்றுள்ளது.