அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கைது... காவல் நிலையம் முன்பு அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு!!

அரசுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கரூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

admk it wing admin arrested at karur

அரசுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கரூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தூத்துக்குடியில் விஏஓவாக இருந்த லூர்துசாமி என்பவர் ஆற்று மணல் கொள்ளை குறித்து புகாரளித்ததால் அவர் பணிபுரியும் அலுவலகத்திற்குள்ளேயே வெட்டிகொலை செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: மோடி ஒரு விஷப் பாம்பு! சர்ச்சை பேச்சுக்கு புது விளக்கம் கொடுத்த காங்கிரஸ் தலைவர் கார்கே

இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவராக இருந்து வரும் நவலடி கார்த்திக் என்பவர் விஏஓ கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் அரசுக்கு எதிராகவும் சமூக வலைத் தளங்களில் அவதூறு கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிலேயெ மிகப்பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் மைதானம் தான் - அன்புமணி பேச்சு

இதை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்த அதிமுகவினர் காவல்நிலையம் முன்பு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios