Asianet News TamilAsianet News Tamil

மோடி ஒரு விஷப் பாம்பு! சர்ச்சை பேச்சுக்கு புது விளக்கம் கொடுத்த காங்கிரஸ் தலைவர் கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியை விஷப்பாம்பு என்று குறிப்பிட்டது பாஜகவின் சித்தாந்தத்தையே குறிக்கும் என்று விளக்கம் தந்துள்ளார்.

Karnataka: Congress Chief Mallikarjun Kharge Calls PM Modi 'Poisonous Snake', Walks Back After BJP Criticism
Author
First Published Apr 27, 2023, 6:10 PM IST | Last Updated Apr 27, 2023, 6:14 PM IST

நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமரை விஷ பாம்பு என்று கூறியது, பாஜக தரப்பிலிருந்து கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய கார்கே, "பிரதமர் மோடி ஒரு 'விஷ பாம்பு' போன்றவர்" என்று கூறினார். இந்தப் பேச்சினால் பாஜக தரப்பில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட கார்கே தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் மோடியைக் குறித்துச் சொல்லவில்லை என்றும், பாஜகவின் சித்தாந்தம் பாம்பு போன்றது சொன்னதாவும் அவர் தெரிவித்துள்ளார். "பிரதமர் மோடிக்காக தனிப்பட்ட முறையில் இதை ஒருபோதும் சொல்லவில்லை. அவர்களின் (பாஜக) சித்தாந்தம் பாம்பு போன்றது. அதைத் நெருங்கினால் மரணம் நிச்சயம்" என்று கார்கே தெளிவுபடுத்தினார்.

கர்நாடகாவில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு! 5 ஆண்டுகளில் 12 சதவீதம் சரிவு!

கார்கேவின் கருத்துக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், காங்கிரஸ் தலைவரின் அறிக்கை சோனியா காந்தி கூறியதை விட மோசமானது என்று கூறினார். "காங்கிரஸ் கட்சி மல்லிகார்ஜுன கார்கேவை கட்சித் தலைவராக்கியது. ஆனால் யாரும் அவரைத் தலைவராகக் கருதவில்லை. அதனால்தான் சோனியா காந்தியை விட காட்டமான அறிக்கை விட விரும்பி இருக்கிறார்" என்று அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

2007 குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சோனியா காந்தி நரேந்திர மோடியை "மவுத் கி சவுதாகர்" (மரணத்தின் வியாபாரி) என்று விமர்சித்தார். பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஷோபா கரந்த்லாஜே, பிரதமர் மோடி குறித்த கருத்துக்கு கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

"மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸின் மூத்த தலைவர். அவர் உலகிற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டின் பிரதமர். அவரை உலகம் முழுவதும் மதிக்கிறது. பிரதமர் பற்றி இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது காங்கிரஸ் எந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என கரந்த்லாஜே சொல்கிறார்.

பெலகாவியில் மராட்டி ஓட்டைப் பிரிக்கும் 3வது சக்தி! பாஜக கோட்டையைத் தகர்க்குமா காங்கிரஸ்?

பிரதமர் மோடியை கார்கே இதுபோல தாக்கிப் பேசுவது  முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது, மோடியை நூறு தலைகள் கொண்ட ராவணன் என்று குறிப்பிட்டார். அகமதாபாத் நகரில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய கார்கே, இவ்வாறு பேசினார்.

"மோடி ஜி பிரதமர். தனது வேலையை மறந்து, அவர் மாநகராட்சி தேர்தல்கள், எம்எல்ஏ தேர்தல்கள், எம்பி தேர்தல்கள் என எல்லா இடங்களிலும் தன் கட்சிக்குப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். உங்கள் முகத்தை நாங்கள் எத்தனை முறை பார்ப்பது? உங்களுக்கு எத்தனை தோற்றங்கள்தான் உள்ளன? உங்களுக்கு ராவணனைப் போல 100 தலைகள் உள்ளதா?" என கார்கே பேசினார்.

Karnataka Elections: ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து; அண்ணாமலை முன்பு காண்டான பாஜக தலைவர் ஈஸ்வரப்பா!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios