தமிழக மக்களின் நலனுக்காக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலுடன் இணைவேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். முன்னதாக, கமலும், '' தேவைப்பட்டால், ரஜினியுடன் இணைந்து செயல்படுவேன்'' எனக்கூறினார்.

கமலும், ரஜினியும் இணைந்து இவ்வாறு கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதன் மூலம் இரு கட்சிகளும் சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ஜெயக்குமார் , ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும், தனித்து இருந்தாலும் அதைபற்றி எங்களுக்கு கவலையில்லை.   

ரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய் சேர்ந்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் என்று கூறிய அவர், , 2021ஆம் ஆண்டிலும் அதிமுகதான்  ஆட்சியைப் பிடிக்கும் என கூறினார்.