அதிமுக அமைப்பு தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

அதிமுக அமைப்பு தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டு, முதல் கட்டத் தேர்தல் வரும் 21 ஆம் தேதி வியாழக்கிழமை அன்றும், இரண்டாம் கட்டத் தேர்தல் 25 ஆம் தேதி திங்கட்கிழமை அன்றும் நடைபெறும். அதன்படி 21 ஆம் தேதி நடைபெறும் முதல் கட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி தேர்தல் நடைபெறும் வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்திற்கு சி.விஜயபாஸ்கர் மற்றும் ஜாபர் அலி, வட சென்னை வடக்கு (மேற்கு) ஜெயபால் மற்றும் வைரமுத்து, வட சென்னை தெற்கு (மேற்கு) கடம்பூர் ராஜூ மற்றும் செல்லப்பாண்டியன், தென் சென்னை வடக்கு (மேற்கு) சண்முகநாதன் மற்றும் சின்னத்துரை, தென் சென்னை தெற்கு (கிழக்கு) எம்.ஜி.எம்.சுப்ரமணியன் மற்றும் பி.என்.ராமச்சந்திரன், தென் சென்னை தெற்கு (மேற்கு) சேதுராமன் மற்றும் திருஞானசம்பந்தம், சென்னை புறநகர் மாவட்டத்திற்கு நத்தம் இரா.விசுவநாதன், கண்ணன் மற்றும் சுப்புரத்தினம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் 37 மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதேபோல் புதுச்சேரி கிழக்கு, புதுச்சேரி மேற்கு, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் மாநிலங்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி, கிளை, கொம்யூன் பஞ்சாயத்து, வார்டு, வட்ட நிர்வாகிகளுக்கான முதல்கட்ட தேர்தல் வருகிற 23 ஆம் தேதி சனிக்கிழமையும், தொகுதி, பகுதி, நகரக் கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 24 ஆம் தேத ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.

அதன்படி புதுச்சேரி கிழக்கு மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக எம்.சி. சம்பத் மற்றும் சொரத்தூர் இரா.ராஜேந்திரன், புதுச்சேரி மேற்கு மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக அருண்மொழிதேவன் மற்றும் முருகுமணி, காரைக்கால் மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களாக முருகுமாறன் மற்றும் பாண்டியன், கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக ஆர்.கமலக்கண்ணன், பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் அசோக்குமார் ஆந்திரா, தெலுங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக பா. பென்ஜமின், மாதவரம் ஏ. மூர்த்தி மற்றும் பி.வி. ரமணா, மகாராஷ்டிர மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக ஆர்.பி.உதயகுமார் மற்றும் என்.சந்திரசேகரன், கேரள மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக எஸ்.பி. வேலுமணி, செ.தாமோதரன், ஏ. நாசர் மற்றும் எஸ்.கே. சுகுமார், புதுடெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக என்.தளவாய்சுந்தரம், மற்றும் ப.ரவீந்திரநாத், அந்தமான் மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக சி.வி. சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். மாவட்டச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் தங்கள் மாவட்ட, மாநிலங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான ரசீதுப் புத்தகம், விண்ணப்பப் படிவம், வெற்றிப் படிவம் முதலானவற்றை, தேர்தல் நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தலைமைக் கழகத்தில் இருந்து பெற்றுச் சென்று அவற்றை மாவட்ட, மாநிலத் தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட, மாநிலத் தேர்தல் பொறுப்பாளர்கள், தேர்தல் நடைபெறும் நாளுக்கு முதல் நாளே சம்பந்தப்பட்ட மாவட்ட, மாநிலத்திற்குச் செல்ல வேண்டும். தேர்தல்களை நடத்தி முடித்து வெற்றிப் படிவத்தில், பொறுப்பாளர்கள் கையொப்பம் இட்டு, வெற்றிப் படிவம், ரசீதுப் புத்தகம், விண்ணப்பக் கட்டணம் முதலானவற்றை தேர்தல் முடிவுற்ற மூன்று நாட்களுக்குள் மாவட்ட, மாநிலத் தேர்தல் பொறுப்பாளர்கள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கழக அமைப்புத் தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் கீழ்காணும் விவரப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள விருப்ப மனு விண்ணப்பக் கட்டணங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மற்றும் மாநிலங்களுக்கு அறிவிக்கப்படும் தேர்தல் பொறுப்பாளர்களிடம் செலுத்தி, அதற்கான விண்ணப்பப்படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதன்படி மாவட்டச் செயலாளர் 25 ஆயிரம் ரூபாய், மாவட்ட அவைத் தலைவர், இணைச் செயலாளர்,துணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 5 ஆயிரம் ரூபாய், புதுச்சேரி கிழக்கு, புதுச்சேரி மேற்கு, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா,புதுடெல்லி மற்றும் அந்தமான் மாநிலங்களுக்கான கிளை, கொம்யூன் பஞ்சாயத்து, வார்டு, வட்டக் கழக நிர்வாகிகளுக்கான செயலாளர் ரூ.100, அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்புப் பிரதிநிதிகளுக்கு கட்டணம் இல்லை. தொகுதி, பகுதி, நகரக் கழக நிர்வாகிகளுக்கான செயலாளர் ரூ.200, அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மாவட்டப் பிரதிநிதிகள் ரூ.100, மாவட்டச் செயலாளர் ரூ.1,000, மாவட்ட அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர் ரூ.500, மாநிலச் செயலாளர் 5 ஆயிரம் ரூபாய், மாநில அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும்பொதுக்குழு உறுப்பினர்கள் ரூ.1,500 ஐ கட்டணமாக தேர்தல் பொறுப்பாளர்களிடம் செலுத்தி விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.