ADMK govt only for commission.stalin slams

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பேருந்துக்கட்டணத்தை உயர்த்தி பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் . இந்த ஆட்சி மக்களுக்காக நடக்கும் ஆட்சியல்ல என்றும் கமிஷனுக்காக மட்டுமே நடக்கும் ஆட்சி என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு இன்றுமுதல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. பொது மக்கள் மத்தியில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ள அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை – எளிய, நடுத்தர மக்களை சோதனைக்கும், வேதனைக்கும் தொடர்ந்து ஆளாக்கி, அடிக்குமேல் அடித்துக் கசக்கிக் கந்தலாக்கி வரும் அதிமுக அரசு அடுத்த தாக்குதலாக, திடீரென்று 3600 கோடி ரூபாய்க்கு மேல் பேருந்துக் கட்டணங்களை மிகக் கடுமையாக உயர்த்தியிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

டீசல் விலை கடுமையாக உயர்ந்திருந்த கடந் இருந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும், முதியவர்களும், மாணவர்களும் பயன்படுத்தும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல், ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்தவர் தலைவர் கலைஞர் என தெரிவித்துள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் மாநகர பேருந்துகளில் 2 ரூபாயாக இருந்த குறைந்தபட்சக் கட்டணம் 2011 அதிமுக ஆட்சியில் 3 ரூபாயாக உயர்த்தப்பட்டு, இப்போது 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநகர பேருந்துகளில் 12 ரூபாயாக இருந்த அதிகபட்சக் கட்டணம் இன்றைக்கு 23 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

பேருந்துகளின் கட்டண உயர்வுகளையும் பார்த்தால், பத்து ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கூடுதலாகி இருக்கிறது. குறிப்பாக, ஐ.டி. ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் ஏ.சி. பேருந்துகளின் கட்டணம் 90 ரூபாயிருந்து 140 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல் சென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்ல 235 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 372 ரூபாயகவும், மதுரைக்கு செல்லும் கட்டணம் 325 ரூபாயிலிருந்து 515 ரூபாயாகவும், திருநெல்வேலிக்கு 695 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது என வேதனை தெரிவித்துள்ளார்

2015 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் டீசல் விலை குறைந்து வருகின்ற நிலையில், இப்படியொரு விஷம் போன்ற கட்டண உயர்வை அறிவித்திருப்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான . இந்த ஆட்சி மக்களுக்காக நடக்கும் ஆட்சியல்ல என்றும் கமிஷனுக்காக மட்டுமே நடக்கும் ஆட்சி என மீண்டும் மீண்டும் நிரூபித்து அறிவித்துக் கொண்டிருக்கிறது மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.