அதிமுக பொதுக்குழு விவகாரம்... ஈபிஎஸ்-இன் மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!
அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர். இந்த நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது குறித்து சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையும் படிங்க: இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !
அதிமுகவை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்னை வெடித்தது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு இடையே நீதிமன்ற கட்டுப்பாடுகளுடன் கடந்த ஜூன் 23 ஆம் பொதுக்குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டை மீறியதாக ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிதான் திமுக ஆட்சியை கவுக்க போறாரு..!! ஸ்டாலின் கோட்டையில் வெடி வைத்த ராதா ரவி...
அப்போது, ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் செல்லாது எனவும், பொதுக்குழுவுக்கு தடைக் கோரும் வழக்கை தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க ஓபிஎஸ் தரப்பினர் இன்று மனு அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.