அதிமுக பொதுக்குழு கூட்டம் எங்கு நடைபெறும்? ஆய்வுக்கு பின் முடிவை அறிவித்தது அதிமுக!!
ஜூன் 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர். இந்த நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது குறித்து சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் விரைவில் பாஜகவில் இணைவாரா? முன்னாள் அமைச்சர் வளர்மதி கருத்தால் பரபரப்பு!!
அதிமுகவை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்னை வெடித்தது. இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக அறிவித்தார். இந்நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வம் வகித்து வரும் பொருளாளர் பதவியில் இருந்து அவரை தூக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இதனிடையே அதிமுகவின் அடுத்த பொதுக் குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இதையடுத்து அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடத்தும் ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. அடுத்த மாதம் நடைபெற்ற உள்ள பொதுக் குழுவை வானகரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு நடத்தாமல் மாற்று இடத்தை நிர்வாகிகள் தேர்வு செய்ய முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு மேடை அமைக்கும் பணி..! திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
இதையடுத்து மீனம்பாக்கம், ஒஎம்ஆர் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடத்தலாம் என பரிசீலிக்கப்பட்டது. பின்னர் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் விஜிபி ரிசார்டில் பொதுக் குழுவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பொதுக் குழு நடைபெறும் இடத்தை தயார் செய்யும் பணிகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் அந்தப் பணிகளை பார்வையிட்டனர். இந்த நிலையில் ஈசிஆர் விஜிபியில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடத்தும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடு இருப்பதால் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறும் இடம் தொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திலேயே மீண்டும் பொதுக் குழுவை நடத்தி கொள்ள நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.