அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு மேடை அமைக்கும் பணி..! திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 11 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் இசிஆர் சாலையில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென மேடை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 11 அதிமுக பொதுக்குழு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்க்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் இபிஎஸ் தரப்பு பொதுக்குழுவில் நிராகரித்துள்ளது. இதனையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவலைத்தலைவர் தமிழ் மகன் உசைன் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தேதியை அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் தரப்பு இந்த பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லாது எனக்கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்பட்டது.
ஓபிஎஸ் முக்கிய ஆதரவாளர்கள் மீது திடீர் வழக்கு பதிவு செய்த போலீஸ்.. என்ன காரணம் தெரியுமா?
இபிஎஸ்க்கு அதிகரிக்கும் ஆதரவு..! ஓபிஎஸ் அணியில் இருந்து தாவிய பொதுக்குழு உறுப்பினர்கள்
பொதுக்குழு பணி திடீர் நிறுத்தம்..?
இந்தநிலையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. எப்பொழுதும் அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெறும் இந்த முறை மாற்று இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. கோவை மேட்டுப்பாளையம், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கல்லூரி, மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரி மைதானம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபி அரங்கம் உள்ளிட்ட இடங்களில் எந்த இடத்தில் நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து இசிஆர் சாலையில் உள்ள விஜிபி மைதானத்தில் நடத்த திட்டமிட்டு இதற்கான பணிகளை அதிமுக மூத்த நிர்வாகிகள் பார்வையிட்டு வந்தனர். இதனையடுத்து பொக்லைன் வாகனங்கள் மூலம் அரங்கம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் திடீரென அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளிடம் கேட்கப்பட்ட போது திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனோ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் எந்த இடத்தில் பொதுக்குழு நடைபெறவுள்ளது என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் பதவியா? மத்திய அரசு கொடுத்த ஆஃபர்..!