சசிகலா ஒரு அரசியல்ஞானி, ராஜதந்திரி என்று ஓ.பி.எஸ்.ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் புகழ்ந்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா அடித்தே கொலை செய்யப்பட்டார் - மீண்டும் குபீர் கிளப்பும் பொன்னையன் என்ற தலைப்பில் "NEWSFAST" தளத்தில் பொன்னையின் பேட்டியை செய்தியாக வெளியிட்டிருந்தோம். பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்ததால் அம்மா தாக்கப்பட்டதாவும், மயக்க நிலையிலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பரபரப்பு குற்றஞ்சாட்டுகளை பதிவு செய்திருந்தார். 

இந்தச் சூழலில் மீண்டும் டெரர் போட்டியை கூலாக தட்டி விட்டிருக்கிறார் அவர், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரைப் பார்க்க அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஊடகங்களில் தாறுமாறாக செய்திகள் வெளியானது.கட்சி கட்டுப்பாட்டை மீறக் கூடாது என்பதற்காக அமைதியாக இருந்துவிட்டோம். அம்மா மருத்துவமனைக்கு வரும் போதும் உள்ளே அனுமதிக்கப்படும் போதும் அங்கிருந்த கேமராக்கள் அணைக்கப்பட்டன.."

அம்மா சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படத்தை வெளியிடுங்கள் என அனைத்து தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. சரி அம்மா ஒரு பெண் என்பதால் அது குறித்து பேசாமல் இருந்து விட்டோம். சரி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போதாவது ஒரு புகைப்படத்தை எடுத்து ஊடகங்களிடம் அளிக்க சசிகலாவிடம் கோரிக்கைவிடுத்தோம். ஆனால் எங்களின் கோரிக்கைகளை அவர் முற்றாக நிராகரித்ததால் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

சசிகலா உண்மையிலேயே ஒரு அரசியல்ஞானி, ராஜதந்திரி என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை... இவ்வாறாக முடிகிறது பொன்னையனின் பேட்டி.. நீங்களே முடிவு பண்ணிக்குங்க பாஸ்...