Asianet News TamilAsianet News Tamil

"பெங்களூரு புகழேந்தி ஒரு மேய்க்கால் புறம்போக்கு ".. ஓபிஎஸ்க்கு அவருடன் என்ன தொடர்பு..? எகிறிய ஜெயக்குமார்.

"பெங்களூர் புகழேந்தி ஒரு மேய்க்கால் புறம்போக்கு"  என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தியை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கலாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Admk Ex Minister Jayakumar was Scold bangalore pugazhendi unparliamentary words..
Author
Chennai, First Published Jun 21, 2022, 8:11 PM IST

"பெங்களூர் புகழேந்தி ஒரு மேய்க்கால் புறம்போக்கு"  என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தியை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கலாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.தொண்டனுக்கு ஒரு நியாயம் ஓபிஎஸ்-க்கு ஒரு நியாயமா என்றும் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கொழுந்துவிட்டு எரிகிறது.. 23 ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக நியமிப்பதற்கான அனைத்து வேலைகளையும் அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். பொதுக்குழு நடந்தால் வன்முறை வெடிக்கும், கட்சியின் சட்ட திட்டங்களை மீறி பொதுக்குழுவை நடத்த கூடாது, அதற்கு காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என ஓ பன்னீர்செல்வம் கூறிவருகிறார்.

Admk Ex Minister Jayakumar was Scold bangalore pugazhendi unparliamentary words..

ஆனால் திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என எடப்பாடி தரப்பினர் உறுதியாக கூறிவிட்டனர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி பொதுக்குழுவில் வன்முறையை தூண்ட  இபிஎஸ் திட்டமிட்டிருப்பதாகவும், எனவே காவல்துறை அதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் நேற்று தமிழக காவல்துறை டிஜிபி யை சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது  அதே வேலையில் அவர் ஓ பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் ஓ.பன்னீர்செல்வம் பெங்களூரு புகழேந்தி இடையேயான சந்திப்பை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறிய விவரம் பின்வருமாறு:-  ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வந்த பலர் இப்போது இபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளனர். பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார், இது வழக்கத்துக்கு மாறாக உள்ளது, பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என பழனிச்சாமிக்கு செல்போன் மூலம் ஓபிஎஸ் பேசி இருக்கலாம்.

ஒற்றை தலைமை என்பது கட்சிக்கு அவசியமான ஒன்று, அதைத்தான் நான் வெளிப்படையாக சொன்னேன், அதில் எந்த தவறும் இல்லை, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது மாவட்ட செயலர்களுக்கு மட்டும் தெரிய வேண்டுமா? கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு தெரியக்கூடாதா? தொண்டர்களுக்கு தெரியக்கூடாது என்பது ஓபிஎஸ்சின் கருத்தா?என கேள்வி  எழுப்பினார்.

Admk Ex Minister Jayakumar was Scold bangalore pugazhendi unparliamentary words..

அப்போது பெங்களூர் புகழேந்தி  ஓபிஎஸ் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பெங்களூரு புகழேந்தி " ஒரு மேய்க்கால் புறம்போக்கு"  கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும், அதில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்  ஓபிஎஸ் இபிஎஸ் என இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

அப்படியிருக்கும்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தியை ஓபிஎஸ் சந்திக்கலாமா? அப்படி என்றால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்க்கு ஒரு சட்டம் மற்றவர் ஒரு சட்டமா? எடப்பாடி பழனிச்சாமி அதுபோன்று நடந்து கொண்டாரா என அவர் சரமாரியாக கேள்வி எழுப்பினார். பெங்களூர் புகழேந்தி ஜெயக்குமார் மேய்க்கால் புறம்போக்கு என கூறியுள்ள வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios