அதிமுகவில் அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதிமுக அமைப்பு ரீதியாக 56 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக வசதிக்காக 67 மாவட்டங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கட்சி ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 29 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

அதில், கட்சியின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் சில மாவட்டங்களை விரிவாக்கம் செய்து மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இதோ..