admk commitee meeting held in royapet and fighting within the party for candidate discussion
சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது
வேட்பாளர் மற்றும் ஆட்சி மன்ற குழு நிர்வாகிகள் தேர்வில் ஒருமித்த கருத்து இல்லை என்றும்,எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வோம் என்று முதல்வர் தெரிவித்து உள்ளார்
ஆட்சி மன்ற குழுவில் பன்னீர் ஆதரவாளருக்கும்,எடப்பாடி அதரவாளருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சலசலப்பு ஏற்பட்டு உள்ளது
இதனை தொடர்ந்து தற்போது,அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை நாளை மறுதினம் 29-ந் தேதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.தற்போது அதிமுக ஆட்சி மன்ற குழு தலைவராக மதுசூதனன் இருக்கிறார்.
வேணுகோபால் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் காலியாக உள்ள 2 இடங்களை நிரப்புவதற்காக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் பேசப்பட்டது
அப்போது எடப்பாடி தரப்பிலிருந்து சில பெயர்களையும், பன்னீர் தரப்பிலிருந்து சில பெயர்களையும் பரிந்துரைத்ததாக தெரிகிறது.
இதில் எடப்பாடி பக்கம் எந்த உடன்பாடும் தெரிவிக்காததால் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது
அதே போன்று ஆர்.கே நகர் இடைதேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது காரணம், அதிமுக வேட்பாளராக ராஜேஷ், தமிழரசன் பெயர்கள் பரிசீலனை யில் உள்ளது என்பதே....ஆனால் பன்னீர் தரப்பிலிருந்து மதுசூதனன் தான் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதில் திட்ட வட்டமாக உள்ளனர்.
ஆனால் எடப்பாடி தரப்பிலிருந்து இதற்கு எந்தவித ஒப்புதலும் இல்லாமல் எதிர்ப்பு தெரிவிப்பதால் மதுசூதனன் வேட்பாளாராக அறிவிக்கப்படுவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
