“ஒரு வருடம் முன்பு வரை நடராஜனைப் பார்க்கக் காத்துக்கிடந்தவர்கள், அவரை கையெடுத்துக் கும்பிட்டவர்கள் இன்று நடராஜன் மரணம் அடைந்த நிலையில் அஞ்சலி செலுத்தக்கூட வராததின் மூலம் தனிமனித அன்பு , நட்பு, நேசம் நன்றியையும் விட பதவி, அதிகாரம் பெரிது என்று நிரூபித்துவிட்டார்கள்.

மத்திய பாஜக அரசின் கோபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக தங்களை அரசாட்சியில் உட்காரவைத்த சசிகலாவின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்வதைத் தவிர்த்துவிட்டார்கள்” என சசிகலா குடும்பத்தினர் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

நடராஜனின் இறுதி ஊர்வலத்தில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, எடப்பாடி, பன்னீர் மீது கோபம்  கொந்தளிக்கும் வார்த்தைகள் வந்ததை கண்கூடாக பார்க்க முடிந்ததாம்.
அமைச்சர் ஜெயக்குமார் தவிர யாரும் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கவில்லை. நடராஜனின் உடலுக்கு அந்தளி செலுத்த வந்த சீமானோ முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஆகியோரின் செயல்பாடு, தமிழகத்தில் பண்பாடு அற்ற அரசியல் நடப்பதைக் காட்டுகிறது. பதவிக்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

இவர்களது நடவடிக்கை மரணத்தைவிட மிகப் பெரிய வலியை ஏற்படுத்துவதோடு, மோசமானதும்கூட. மேலும், நடராசனின் மறைவுக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆளுங்கட்சியில் இருந்து யாரும் இரங்கல் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்கிறார்கள்’  என உருக்கமாகத் தெரிவித்ததற்காக பதிலளிக்கத்தான் ஜெயக்குமாரே பேசியிருக்கிறார்.

அதிமுகவினரின் இந்த செயல்பாடுகளால் தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், “நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சேலம் ரோட்டில் ஒரு ஃப்ளக்ஸும், திருச்சி ரோட்டில் ஒரு ஃப்ளக்ஸும் வைக்கப்பட்டு இருந்தது. இந்த இரண்டிலுமே கீழே, நாமக்கல் நகர அதிமுக எனப் போட்டப்பட்டு இருந்தது.

இந்த ஃப்ளக்ஸ் வைத்தது யார்? என யாருக்குமே தெரியவில்லை. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் தங்கமணி, இது சம்பந்தமாக நாமக்கல் நகர நிர்வாகிகளை கூப்பிட்டு கேட்டாராம். ‘எங்களுக்கு தெரியைலைங்க..’ என சொல்லியிருக்கிறார்கள். இந்த ஃப்ளக்ஸு மேட்டரை  உளவுத்துறை விசாரணை நடத்தியிருக்கிறது. கடைசியில், தினகரன் அணியில் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பெரும் புள்ளியாம்.

இதனால் கடுப்பான தங்கமணி அவரை கூப்பிட்டு விசாரித்தபோது, ‘நாங்களும் அதிமுகதான்... ‘ என்று பதிலடி கொடுத்தாராம் அந்த பெரும் புள்ளி. அந்தப் ஃப்ளக்ஸை உடனே அகற்றிவிடலாமா? என மேலிடத்தில் கேட்டு இருக்கிறார்கள். அதற்க்கு அப்படி ஏதும் செய்ய வேண்டாம் என சொன்னார்களாம்.