’திமுகவுக்கு தூது விட்டது உண்மைதான்...’ எல்.கே.சுதீஷ் அதிரடியால் பாஜக -அதிமுக அதிர்ச்சி..!
அதிமுகவுடன் பாமக கூட்டணி ஒப்பந்தம் செய்ததால் அதிருப்தியில் திமுகவுடன் கூட்டணி ஏற்படுத்த போன்செய்து பெசியது உண்மைதான் என விஜயகாந்த் மைத்துனரும், தேமுதிக துணைப் பொதுச்செயலாளருமான எல்.கே.சுதீஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதிமுகவுடன் பாமக கூட்டணி ஒப்பந்தம் செய்ததால் அதிருப்தியில் திமுகவுடன் கூட்டணி ஏற்படுத்த போன்செய்து பெசியது உண்மைதான் என விஜயகாந்த் மைத்துனரும், தேமுதிக துணைப் பொதுச்செயலாளருமான எல்.கே.சுதீஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வந்த அதேவேளை திமுக பொருளாளர் துரைமுருகனை அவரது கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி தேமுதிகவை அழைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், தேமுதிக எங்களிடம் கூட்டணி அமைக்க போனில் அழைத்தது. விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் இது தொடர்பாக போனில் தொடர்பு கொண்டார். தேமுதிக மூத்த நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர் இங்கே வந்தனர். எங்களிடம் சீட் இல்லை எனக்கூறி அனுப்பி விட்டேன்’’ என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், துரைமுருகனை தேமுதிகவினர் சந்தித்தது குறித்து எல்.கே.சுதீஷ் கூறும்போது, அதிமுக- பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் அதிருப்தியடைந்த நாங்கள் அப்போது திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக துரைமுருகனுடன் பேசினேன். திமுக சார்பாகவும் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். பாமகவுடன் அதிமுக -பாஜக கூட்டணி அமைத்தது வருத்தத்தை ஏற்படுத்தியது’’ என அவர் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து பல வாரங்களாக தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், இடையில் திமுகவுடன் கூட்டணி குறித்து தேமுதிக தூது விட்டது அதிமுகவையும், பாஜக வட்டாரத்தையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.