திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டார்.

தடபுடலாக அமைக்கப்பட்டிருந்த மேடையும், நூற்றுக்கணக்கான சேரும் போடப்பட்டிருந்தன. அமைச்சர் சரியான நேரத்திற்கு வந்திருந்தார் ஆனால், விழாவிற்கு பயனாளிகளுக்கு, பொதுமக்கள் அதிகமாக வராததால், கூட்டமே இல்லாமல் பெரும்பாலான சேர்கள் காலியாக இருந்தால் வெறிச்சோடியது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கூட்டம் சேர்ந்ததும் வரசொல்லிவிட்டு, கூட்டம் சேர்ப்பதற்காக சாலைக்கு சென்ற அதிமுகவினர் அங்கு சென்று கொண்டிருந்த பொதுமக்களை வாங்க வாங்க என கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக  அழைத்து சென்று விழா அரங்கில் உட்கார வைத்தனர். சில அந்த கூட்டத்திலிருந்து தப்பித்து சென்றனர். ஒருவழியாக சேர்கள் நிரம்பியது இதனையடுத்து விழா சிறப்பாக நடந்தது.