சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  கிரவுன் பிளாசா ஹோட்டலில் இன்று அதிமுக- பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் தேமுதிக நிர்வாகிகளும் அங்கு  வருவதாக இருந்தனர். 

ஏற்கனவே தேமுதிகவுடன் பாஜக  நல்ல உறவில் இருந்து வருவதால் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலே விஜயகாந்த்தை சந்தித்து நலம் விசாரிக்க வருவார். அதன் பின் முறையான அறிவிப்பினை பிரேமலதா, பியூஷ் கோயல் முன்னிலையில் வைத்துக் கொள்ளலாம்’ என்று தகவல் தெரிவித்தனர். 

இதனிடையே பாமகவுக்கு 7 இடங்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ‘பாமக வட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு கொண்ட கட்சி. ஆனால் தேமுதிகவோ தமிழகம் முழுக்க வாக்கு வங்கி உள்ள கட்சி. அதனால் பாமகவுக்கு இணையான 7 சீட்டுகள் வேண்டும், அதற்குக் குறைய முடியாது’ என்று பாஜக தரப்பிடம் கடுமையாக தேமுதிக கூறியுள்ளது. 

ஆனால் பேச்சுவார்த்தை முடிவில் தேமுதிகவுக்கு 4 சீட்டுகள் வரை ஒதுக்கலாம் என்று  கூறப்படுகிறது..
பாமக 7, பாஜக 5, தேமுதிக 4 ஆக 16 தொகுதிகள் போக மீதமுள்ள 24 தொகுதிகளில் அதிமுக நிற்கக் கூடும். இதிலும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்மும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஐஜேகே பாரிவேந்தர் ஆகிய மூவரும்  இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்களாகவே நிற்கலாம் என்றும் தெரிகிறது.

இது மட்டுமல்லாமல்  தமிழ் மாநிலக் காங்கிரஸும் அதிமுக அணியில் ஒரு தொகுதி கேட்டு வருவதால் அதிமுகவினர் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.