நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் மகன் ஓபி.ரவிந்திர நாத்குமாரை தவிர மற்ற யாரும் வெற்றிபெறவில்லை, கூட்டணி கட்சிகளும் மொத்தமாக வாஷ் அவுட் ஆனது. அதிமுக பிஜேபி கூட்டணியில் ஜெயித்த தனது மகனை எப்படியாவது அமைச்சரவையில் சேர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் காய் நகர்த்தி வருகிறார் ஓபிஎஸ், ஆனால் முக்கிய புள்ளிகள் சிலர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து தெரிவித்து வருகின்றனர். 
 
தமிழக்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பிஜேபி கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர, போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் படு தோல்வி அடைந்ததது. அப்படி இப்படியே சமாளித்து இரண்டு  வருடம் தான் அதிமுக ஆட்சி இருக்கும் அதற்க்கு பின் என்ன வேணாலும் நடக்கலாம் என்பதால், இனி பதவியை வாங்குவது அவ்வளவு சுலபமல்ல என யோசிக்கும் முக்கிய நிர்வாகிகளும், தேர்தலில் தோல்வி பெற்ற  தம்பிதுரை, கேபிமுனுசாமி போன்ற சில சீனியர்களும்  ராஜ்யசபா சீட் மூலம் எம்.பி.ஆகிவிடலாம் என்று போட்டி போட்டுகொண்டு  எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில், மத்தியில் பிஜேபி ஆட்சி அமைக்க இருப்பதையடுத்து அதிமுக தலைமை மத்திய அமைச்சரவையில் இடம்பெற இருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதில் எடப்பாடி தரப்பு கட்சியில் இருக்கும் சீனியரும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான வைத்தியலிங்கத்துக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தர முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால், தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே தொகுதியான தேனி நாடாளுமன்ற உறுப்பினரும்,தனது மகனுமான ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி ஆகணும் என்ற முடிவில் ஓபிஎஸ் இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் வெளிப்படையாகவே பேசுகிறாராம். இதற்கு பிஜேபி தலைமையிடம் இருந்து க்ரீன் சிக்னல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயங்கர அப்செட்டில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கட்சி சீனியர் வைத்தியலிங்கத்துக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று பிஜேபி தலைமையை கோரிவருவதாக சொல்லப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய இணை அமைச்சர் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. 

மேலும், நாளை மோடி தலைமையிலான அரசு பதவியேற்க உள்ள நிலையில்,  அநேகமாக இன்று மாலையே யார், யாருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் எனத் முழு விவரமும் தெரியவரும். இதுதொடர்பாக மோடி, அமித்ஷா ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தென்னிந்தியாவில் செல்ப் எடுக்காததால் அதை சரிக்கட்டவும், அடுத்து நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்க வசதியாகவும்,  அதிமுகவிற்கு அமைச்சர் பதவி கொடுப்பதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியும் என்று கருதுகிறது பிஜேபி.