மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பின்னர் தனிமையில் வாழ்ந்து வந்த அவர் 2017ஆம் ஆண்டு தனது 47வது வயதில் சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  

நடிகை ஊர்வசியின் அண்ணன் மனைவியை வறுமையின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரை உலகில் தனது நடிப்பால் மக்கள் மனதில் ஆசனமிட்டு அமர்ந்தவர் நடிகை ஊர்வசி. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள அவர், கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஆவார். மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பின்னர் தனிமையில் வாழ்ந்து வந்த அவர் 2017ஆம் ஆண்டு தனது 47வது வயதில் சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் அவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.இந்நிலையில்தான் அவரது குடும்பத்தில் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது நடிகை ஊர்வசியின் அண்ணன் கமலுக்கும் அவரது மனைவி விழுப்புரத்தை சேர்ந்த 52 வயதான பிரமிளாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரமிளா தனது கணவர் கமலை பிரிந்து அண்ணன் சுசீந்திரன் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக வசித்து வந்தார். ஆனால் சுசீந்திரனுக்கு சரியான வேலை இல்லை, இதனால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. அவருடன் சேர்ந்த பிரமிளாவும் வறுமையில் வாடினார்.

நடிகை கல்பனா இங்கிருந்த வரை அண்ணிக்கு பண உதவிகள் செய்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக பிரமிளா சாப்பிட கூட வழி இல்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை அவர்களது வீட்டில் துர்நாற்றம் வீசியது, இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு தனித்தனி அறைகளில் சுசீந்திரனும் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். உடலை மீட்ட போலீசார் அறைகளில் சோதனை நடத்தியதில் சுசீந்திரன் பரிமளா ஆகியோர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் உடல்நிலை சரியில்லாததால், வறுமை வாட்டியதால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும், தங்களின் தற்கொலைக்கு யாரும் காரணம் கிடையாது எனவும் அதில் எழுதி இருந்தனர்.

மேலும் வீட்டிற்கு வாடகை செலுத்த முடியவில்லை வீட்டில் உள்ள பொருட்களை விற்று வீட்டு உரிமையாளருக்கு பணத்தை வழங்கி விடுங்கள் என்றும், தங்களது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லாமல் சுடுகாட்டில் அடக்கம் செய்துவிட வேண்டும் என்றும் அவர்கள் அதில் எழுதி இருந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையின் காரணமாக நடிகை ஊர்வசியின் அண்ணன் மனைவி தனது சகோதரனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.