Asianet News TamilAsianet News Tamil

3 முறை கருவை கலைத்த கொடூரன் மணிகண்டனுக்கு ஜாமீன் தரக்கூடாது.. நீதிமன்றத்தில் கதறும் நடிகை சாந்தினி..!

முதல் மனைவியிடம்  சட்டப்படி விவாகரத்து பெற்று, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததால்  கணவன் மனைவியாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு  சென்றதாகவும் தமிழக சட்டமன்றத்திற்கு பார்வையாளராக மனைவி என்ற அடிப்படையிலேயே அழைத்துச் சென்றதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். 

Actress Shanthini files bail petition against former minister Manikandan
Author
Chennai, First Published Jun 3, 2021, 2:52 PM IST

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த அதிமுக அரசில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். இவருக்கு எதிராக கடந்த வாரம் துணை நடிகை சாந்தினி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதில், அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற போது, தன்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததாகக் கூறியுள்ளார்.

Actress Shanthini files bail petition against former minister Manikandan

தற்போது திருமணம் செய்ய மறுப்பதுடன், அவருடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் அந்த புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல்,  பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில்,  திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறும் புகார்தாரர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக நடிகை செயல்பட்டு வருவதாகவும். மலேஷியாவில் இதுபோல பலரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் உள்ளன என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த முன் ஜாமீன் மனு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது.

Actress Shanthini files bail petition against former minister Manikandan

இந்நிலையில், மணிகண்டனுக்கு, முன்ஜாமீன் வழங்க கூடாது என்று கோரி நடிகை சாந்தினி மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் தன்னுடைய திருமண வாழ்வு சிறப்பாக அமையவில்லை என்றும் அதனால் தான் மகிழ்ச்சியாக வாழ வில்லை என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். தன்னைப் போல ஒரு பெண் தனக்கு கிடைத்தால் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என அவர் தெரிவித்ததாகவும்,  ஆனால்  தான் முதலில் இதை மறுத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் முதல் மனைவியிடம்  சட்டப்படி விவாகரத்து பெற்று, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததால்  கணவன் மனைவியாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு  சென்றதாகவும் தமிழக சட்டமன்றத்திற்கு பார்வையாளராக மனைவி என்ற அடிப்படையிலேயே அழைத்துச் சென்றதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். 

Actress Shanthini files bail petition against former minister Manikandan

மூன்று முறை கருத்தரித்த போது கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் தன்னுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதையெல்லாம் தான் சகித்துக் கொண்டதாகவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். திருமணம் செய்ய வற்புறுத்திய போது, தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் தன்னுடன் இருந்த புகைப்படங்கள் வெளியிடுவேன் என்று   மணிகண்டன் மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். பணம் பறிக்க இந்த குற்றச்சாட்டை கூறியதாக அவர் தெரிவித்துள்ளது முழுக்க முழுக்க பொய் என்றும் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். போலியான மெயில் ஒன்றின் மூலம் தன்னுடைய மெயில் மற்றும் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டதாகவும், அது மணிகண்டனின் தூண்டுதல் என்றும், விசாரணைக்கு இடையூறு செய்துள்ளதால் முன் ஜாமீன் வழங்க கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios