தமிழக பாஜகவில் நடிகை நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோருக்கும், செய்திவாசிப்பாளர் செளதாமணிக்கும் பொறுப்புகளை அறிவித்துள்ளனர்.

தமிழக பாஜக புதிய மாநில நிர்வாகிகள், மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமனத்தை பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். 
அதில் மாநில துணைத்தலைவர்களாக மத்திய மேற்கு சென்னை சக்கரவர்த்தி, நெல்லை நடினார் நாகேந்திரன், நாமக்கல் வி.பி.துரைசாமி, வானதி ஸ்ரீனிவாசன், முருகானந்தம்,  மாநில பொதுச்செயலாளர்களாக கே.டி.ராகவன், கரு நாகராஜன், சீனிவாசன் உள்ளிட்டோரும் மாநில செயலாளர்களாக டால்பின் ஸ்ரீதர், டி.வரதராஜன் உள்ளிட்டோரும் மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

.

 செய்திவாசிப்பாளர் செளதாமணியும் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நடிகை காயத்ரி ரகுராம் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீப்த்தில் பாஜகவில் இணைந்த பால்கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்