நெட்டிசன் ஒருவர், ‘’உன் சங்கராசாரிக்கிட்ட போய் கேளு மேன்!! "தீக்குரலை சென்றோதோம்" என ஆண்டாள் பாசுரத்தில் சொன்னதை தீக்குறளை சென்றோதோம் என கூறியதாய் திரிச்சு சொன்னவன் அவன்! அறம், பொருள், இன்பம் பற்றி மட்டும் பேசி 'வீடு' பற்றி பேச திருகுறள் நீசநூல் கோவில்களில் ஓத கூடாது...அதே நாய் தெய்வத்தின் குரலில்..’’என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

 

அதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி,’ஒரு புனிதரை காலம் சென்றவரை நாய் எனும் சாக்கடைவாயே. என்னதான் பெரியாரிஸ்ட்டா இருந்தாலும் அடிப்படை நாகரிகம், மரியாதை பேச்சில் இருக்கும் என்று நம்பினேன். எதிரிக்கு கூட மரியாதை தருவதே தமிழன் மாண்பு. அதெல்லாம் இல்லாத நீ ஒரு   திராவிட எச்சை’’எனத் தெரிவித்துள்ளர். இந்தப்பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.