நடிகை கஸ்தூரி  அரசியல் விவகாரங்களில் அனைத்து காட்சிகளையும் கிழி கிழியென கிழித்து தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறார்.  
இவரது டுவீட்டுகள்  நகைச்சுவையாக நக்கலடிக்கும் விதமாகவும் இருக்கும். அதுவும் நேற்று பாமகவை சீண்டியது உச்சக்கட்டம்ன்னு தான் சொல்லணும், நேற்று போட்டதில்; PMK  4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக திமுக  ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி  புரட்சி பண்ணிரலாம். திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு? என கலாய்த்திருந்தார்.

இன்று பாமக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததிலிருந்து அரசியல் பிரமுகர்கள், விமர்சகர்கள் என கிழித்து தொங்கவிடுகின்றனர்.

நேற்று போட்ட ட்வீட்டின் தொடர்ச்சியாக, எப்போதுமே பாமகவுக்கு NDA வில்தான் அதிக சீட்டு கிடைக்கும். BJP கூட்டணியில் போன முறை மிக அதிகமாக 8 சீட்டுக்கள் - வென்றது 1 மட்டுமே.  இந்த முறை வென்றாலும் வெல்லாவிட்டாலும் ஒரு MP பதவி நிச்சயம் . வேறு என்ன வேண்டும்? 
#வெற்றிதான்கொள்கை.  #பதவித்தான்பாலிசி  #powerOfPower  என பாமகவை கிழித்து தொங்கவிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த கலாய்க்கு ரீட்டிவீட், கமண்ட்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.