நடிகை கஸ்தூரி  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த கையேடு ஏசியா நெட் நேரலையில் பல்வேறு கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார். 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.12 லட்சம் நிவாரண நிதியாக வழங்கினார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, தண்ணீர் சுத்தம் செய்யும் சிறிய வகை மெஷின் வாங்கிக் கொடுத்தார்.

இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகை கஸ்தூரி, பாதிக்கப்பட்ட  மகளுக்கு உதவி செய்ய நிறைய பேர் ஆர்வமாக களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். யார் உதவுகிறார்  யார் உதவ வரவில்லை என்றெல்லாம் பேசிக்கொண்டு இருப்பதை விட, நம்மால் முடிந்ததை செய்தால் போதும் என்றார்.....

அப்போது, ரஜினி ரசிகர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவி செய்த போது, தனக்கு உதவியதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய கஸ்தூரியிடம்,  எத்தனையோ பிரபலம் ட்வீட் செய்யும் போது அந்த அளவிற்கு பேசப்படவில்லை என்றாலும், தாங்கள் எதை பதிவிட்டாலும் உடனே வைரலாக மாறி விடுகிறதே என்ற கேள்விக்கு..?

"உண்மையை சொன்னால்.. அது பரப்பரப்பாக மாறி விடுகிறது என சிரித்துக் கொண்டே சொல்கிறார். கஜா பாதிப்புக்கு பிறகு, நடிகர்கள் கூட அங்கும் ஒன்றுமாய் இங்கு ஒன்றுமாய் மக்களுக்கு உதவ முன் வந்து உள்ளனர்.

ஆனால், நடிகைகளில் கஸ்தூரியை தவிர அந்த அளவிற்கு யாரும் முன் வந்து உதவியதாக இதுவரை தகவல் இல்லை என்பது  குறிப்பிடத்தக்கது.