திமுகவின் இளைஞரணிச் செயலாளருமாக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இன்று அமைச்சராக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் நல்ல முகூர்த்த நாள், நல்ல நேரம் பார்த்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வதை நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.

திமுக அமைச்சரவை பொறுப்பேற்றபோதே, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று சில அமைச்சர்கள் கூறிவந்தனர். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில், திமுக உட்கட்சித் தேர்தல்கள் முடிந்து, இளைஞரணிச் செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். 

இதையும் படிங்க;- நீங்க ஈவெரா கொள்கையை ஏற்பவராக இருந்தால் எமகண்ட நேரத்தில் பதவி ஏற்றுக்கொள்ளுங்கள்.. உதயநிதியை சீண்டும் பாஜக.!

இதையடுத்து, அவரை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி, அன்பில் மகேஷ், பொன்முடி உள்ளிட்டோர் கூறிவந்தனர். இந்நிலையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமாக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இது குறித்து எதிர்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி அடுத்தவன் என்றால் அது ஆரியமாயை, சனாதனம் மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம் சுபமுகூர்த்தம் எல்லாம் பார்த்துத் தொடங்குவதே பகுத்தறிவு என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- டிசம்பர் 14-ம் தேதி சுபமுகூர்த்த நாள். காலை 9.30 மணி மிகச் சிறந்த மங்களகரமான நேரம். அடுத்தவன் என்றால் அது ஆரியமாயை, சனாதனம் மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம் சுபமுகூர்த்தம் எல்லாம் பார்த்துத் தொடங்குவதே பகுத்தறிவு' என விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க;- என்னது அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு தம்பியா? BJP ஆளுங்க சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதை.. கடுப்பான கஸ்தூரி