Asianet News TamilAsianet News Tamil

குடியுரிமை திருத்த சட்டத்தை தவறா சித்தரிக்கிறாங்க... இது நடிகை கவுதமியின் வாய்ஸ்!

குடியுரிமைத் திருத்த சட்டம் தொடர்பாக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களால் தேர்தலில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்தச் சட்டத்தால் இந்திய குடிமக்களுக்கு  ஆபத்தோ பிரச்சினையோ இல்லை. முதலில் இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளாமலோ அல்லது வேண்டுமென்றோ தவறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Actress Gowthami on CAA against protest
Author
Coimbatore, First Published Dec 28, 2019, 10:31 PM IST

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராடுவதில் அர்த்தமில்லை.  இந்தச் சட்டம் பற்றி தவறாகச் சித்தரிக்கப்படுகிறது என்று பாஜக நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான கவுதமி தெரிவித்துள்ளார். Actress Gowthami on CAA against protest
தமிழகத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் டிச. 27 அன்று நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் டிச. 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று மாலை அரசியல் கட்சியினர் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டனர். பாஜக நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான கவுதமி கோவை மாவட்டத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Actress Gowthami on CAA against protest
“உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்கவே உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதன் மூலம் நல்ல வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு செயல்படுத்தப்படும். குடியுரிமைத் திருத்த சட்டம் தொடர்பாக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களால் தேர்தலில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்தச் சட்டத்தால் இந்திய குடிமக்களுக்கு  ஆபத்தோ பிரச்சினையோ இல்லை. முதலில் இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளாமலோ அல்லது வேண்டுமென்றோ தவறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.Actress Gowthami on CAA against protest
இந்தப் போராட்டங்கள் எல்லாம் தவறான புரிதலால் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தற்போது இந்தச் சட்டம் பற்றி மக்களில் பலர் புரிந்துகொள்ள தொடங்கிவிட்டார்கள். குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராடுவதில் அர்த்தமில்லை.  இந்தச் சட்டம் பற்றி தவறாகச் சித்தரிக்கப்படுகிறது” என கவுதமி தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios