அமமுகவுக்கு ஆதரவாக நடிகர் விவேக்கை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமமுகவுக்கு ஆதரவாக நடிகர் விவேக்கை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளிலும் இடைத்தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது அமமுக. அனைத்து தொகுதிகளிலும் டி.டி.வி.தினகரன் பிரச்சாரம் செய்து வருகிறார். அமமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர்கள் செந்தில், ரஞ்சித் ஆகியோரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் நடிகர் நடிகர் விவேக்கை அழைத்ததாக கூறப்படுகிறது. நடிகர் விவேக்கும் அதற்கு சம்மதித்துள்ளார். ஆனாலும் ஒரு நிபந்தனை விதித்துள்ளார் விவேக்.
‘அதிமுகவை சேர்ந்த தலைவர்களை விமர்சித்து பேச மாட்டேன். மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களையும் விமர்சிக்க மாட்டேன். அமமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கையை மட்டுமே முன்வைத்து பிரச்சாரம் செய்வேன்’ என டி.டி.வி.தினகரனிடம் ஓபனாக கூறியுள்ளார். டி.டி.வி.தினகரன் தரப்போ ’’அதிமுக தலைவர்களை விமர்சித்து பேசினால் மட்டுமே மக்கள் மத்தியில் பிரச்சாரம் எடுபடும். பொத்தாம் பொதுவாக பேசினால் யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என எடுத்துக் கூறியுள்ளார். 
விடாப்பிடியாக அதனை விவேக் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டாராம். ’நான் அனைவருக்கும் பொதுவானவன். எனவே, யாரையும் விமர்சித்து பேச முடியாது’ என வெளிப்படையாகக் கூறி மறுத்து விட்டதாக கூறுகிறார்கள் அமமுகவினர்.
